சீன பொருளாதாரம் வீழ்ச்சியா? 30 வருட குறைவான டார்கெட் வைத்த ஜி ஜின்பிங் அரசு..!

பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சியில் உலக நாடுகளுக்குத் தொடர்ந்து வியப்பு அளித்து வந்த சீனா இந்த வருடத்திற்கான பொருளாதார வளர்ச்சி அளவீட்டை 30 வருட குறைவான அளவீட்டை நிர்ணயம் செய்துள்ளது. ஒரு சீன மக்களுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனா அமெரிக்காவுடன் போட்டிப்போட்டு வரும் நிலையில், பல உற்பத்தி மற்றும் மூலப் பொருட்களுக்காக உலக நாடுகள் சீனாவை நம்பியிருக்கும் வேளையில், வளர்ச்சி அளவீட்டை 30 வருட குறைவான அளவீட்டை அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

சீனா பொருளாதாரம்

கொரோனா வைரஸ் தாக்கம், ரியல் எஸ்டேட் துறை சரிவு, உக்ரைன் மீதான போர் மூலம் நிலவும் “கடுமையான மற்றும் நிச்சயமற்ற” கண்ணோட்டத்தை இந்த ஆண்டுச் சீனா பொருளாதாரம் எதிர் கொள்ளும் எனச் சீனா நாடாளுமன்றத்தின் ப்ரீமியரான லி கெகியாங் எச்சரித்து உள்ளார்.

 ஜிடிபி 5.5 சதவீதம்

ஜிடிபி 5.5 சதவீதம்

இதன் மூலம் 2022ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதாவது ஜிடிபி அளவு 5.5 சதவீதமாக மட்டுமே இருக்கும் என லி கெகியாங் சீனா நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்த 5.5 சதவீத வளர்ச்சி என்பது சீனாவின் 1991 ஆம் ஆண்டின் வளர்ச்சி அளவீடாகும்.

 சீன நாடாளுமன்றம்
 

சீன நாடாளுமன்றம்

உலகிலேயே 2வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் சீனா, 2022ஆம் ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி அளவீட்டை இன்று 3000 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட Great Hall of the People கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் லி கெகியாங் தற்போது சீனாவிற்குப் பல ஆபத்துக்களும், சவால்களும் இருக்கிறது, அதை விரைவில் சரி செய்வோம் எனவும் கூறினார்.

 ஜி ஜின்பிங்

ஜி ஜின்பிங்

சீன அதிபரான ஜி ஜின்பிங் தலைமையில் சீனாவின் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வியல் மேம்பட்டு வரும் நிலையில், டெக் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாட்டில் சீனாவின் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. ஆனால் தனியார் டெக் நிறுவனங்களில் சீன அரசின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இது விரைவில் சீனாவுக்குப் பலன் அளிக்கும்.

 30 வருட சரிவு

30 வருட சரிவு

இதேவேளையில் உற்பத்தி துறையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா 30 வருட குறைவான வளர்ச்சி டார்கெட்-ஐ நிர்ணயம் செய்துள்ளது, உலக நாடுகளில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதில் முக்கியமாகக் கொரோனா தொற்றை முதலில் வென்று பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த நாடாகச் சீனா விளங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

China sets 30 year lowest GDP growth target for 2022

China sets 30 year lowest GDP growth target for 2022 சீன பொருளாதாரம் வீழ்ச்சியா? 30 வருட குறைவான டார்கெட்.. ஜி ஜின்பிங் நிலை என்ன..?!

Story first published: Saturday, March 5, 2022, 11:07 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.