ஓடும் பேருந்தின் மேல் ஏறி அரை நிர்வாணத்துடன் இளைஞர் கலாட்டா..! <!– ஓடும் பேருந்தின் மேல் ஏறி அரை நிர்வாணத்துடன் இளைஞர் கலாட்… –>

சேலத்தில் ஓடும் பேருந்தின் மேல் ஏறி அரை நிர்வாணத்தில் அங்கும் இங்கும் ஓடியும், ஆட்சியர் அலுவலகம் முன் இருக்கும் தியாகிகள் நினைவு தூண் மீது தியானம் செய்வது போல் கலாட்டா செய்தவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

இரவு 10 அளவில் இளைஞர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதாகவும், காவலில் இருந்த போலீசார் தடுத்ததை அடுத்து மேல்சட்டையை கழற்றி சாலையில் வீசிவிட்டு பேருந்தின் மீது ஏறி இளைஞர் கலாட்டா செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த இளைஞர், சிலர் தன்னை தாக்கியதாகவும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறும் வீடியோ வெளியாகி உள்ளது. இளைஞரை பிடித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.