கபில்தேவ்வை முந்தி சாதனை படைத்த அஷ்வின்| Dinamalar

மொகாலி: இலங்கை கிரிக்கெட் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டி மொகாலியில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 574 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 174 ரன்னுக்கு ஆல்அவுட் ஆகி பாலோஆன் ஆனது. இதனால், 400 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணி, மீண்டும் சரிவை சந்தித்தது. இதில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், இலங்கை வீரர் அஸ்லன்காவை அவுட்டாக்கிபோது, டெஸ்டில் அதிக விக்கெட் (435) வீழ்த்தியவர்களில் கபில்தேவை (434 விக்கெட்) முந்தி 2வது இடத்தை பிடித்தார். அனில் கும்ளே 619 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.