‛நானே வருவேன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

'என்ஜிகே' படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கி வரும் படம் 'நானே வருவேன்'. இதில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது அண்ணன் படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். புவனா சுந்தர் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில், தற்போது இயக்குனர் செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரானது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.