‘போரை நிறுத்த புடினிடம் பேசுங்கள்’: பிரதமர் மோடியிடம் உக்ரைன் கோரிக்கை

உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதலை நிறுத்த, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பேச்சு வார்த்தை நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தினார்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல்  11வது (ஞாயிற்றுக்கிழமை) நாளாக இன்றும் நீடிக்கிறது. கடந்த 11 நாட்களாக உலகப் போர் மூளுமோ என்ற அச்சத்தில் உலகமே உள்ளது. ரஷ்யா உக்ரைனை மண்டியிட வைக்க வேண்டும் என்று விரும்புகிறது ஆனால் உக்ரைன் சரணடைய தயாராக இல்லை. 

இந்நிலையில் உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா சனிக்கிழமை (மார்ச் 5, 2022) தனது நாட்டில் ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதலை நிறுத்த, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பேச்சு வார்த்தை நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தினார்.

 ஜீ மீடியாவின் கேள்விக்கு பதிலளித்த குலேபா, இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான “சிறப்பு உறவுகளை” சுட்டிக்காட்டி, “இந்தியாவுடன் சிறப்பு உறவுகளை பேணும் அனைத்து நாடுகளும்  ரஷ்யா அதிபர் புட்டினிடம் முறையிடலாம். நாங்கள் பிரதமர் மோடியை ஜனாதிபதி புடினைத் தொடர்ந்து தொடர்புகொண்டு  போரை நிறுத்த முயற்சி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்தப் போர் அனைவரின் நலனுக்கும் எதிரானது.

பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியதில் இருந்து பிரதமர் மோடியும் அதிபர் புடினும் இரண்டு முறை பேசினர். பிப்ரவரி 24 அன்று தனது முதல் உரையாடலின் போது, ​​தாக்குதலை நிறுத்திவிட்டு இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் பாதைக்குத் திரும்புமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!

மேலும், பேச்சு வார்த்தையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கு இந்திய மாணவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தினார். மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவும் நோக்கில் ரஷ்யாவும், இரு நாட்களுக்கு முன் தாக்குதலை 6 மணி நேரம் நிறுத்தியதோடு,  மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர, பஸ். ரயில் சேவைகள் அளித்த உதவியது.
 
உக்ரைன் நகரங்களான மரியுபோல் மற்றும் வோல்னோவாகாவிலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற மனிதாபிமான தளங்களை அனுமதிக்கும் வகையில், ரஷ்யா சனிக்கிழமை (மார்ச் 5) உக்ரைனில் ஒரு பகுதி போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் அயராத நடவடிக்கைகளின் மூலம், உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க | உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி போலந்தில் தஞ்சம் புகுந்தார்; ரஷ்யா பரபரப்பு தகவல்

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.