Vijay:நாங்க மறக்கல, ஆனால் நீங்க மறுந்துட்டீங்களே விஜய்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்
பீஸ்ட்
படத்தில் நடித்து முடித்துள்ளார்
விஜய்
. அடுத்ததாக வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

தளபதி 66 பட வேலையே இன்னும் துவங்காத நிலையில்
தளபதி 67
படம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் தளபதி 67 படத்தை இயக்கப் போவதாக கூறப்படுகிறது.

இது நல்ல விஷயம் தான் என்றாலும், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு நடந்ததை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. அதாவது ஹீரோவான விஜய்யை விட வில்லன் விஜய் சேதுபதி தான் ஸ்கோர் செய்தார். படத்தை பார்த்த அனைவரும் விஜய் சேதுபதியை பற்றியே பேசினார்கள்.

Nayanthara:நயன்தாராவை தான் ‘அப்படி’ சொன்னாரா பீஸ்ட் ஹீரோயின் பூஜா ஹெக்டே?
மாஸ்டர் படத்தின் ஹீரோ விஜய் தான், ஆனால் படம் விஜய் சேதுபதியுடையது என்று விமர்சனம் எழுந்தது. மாஸ்டர் படத்தில் நடந்ததை விஜய்ணா மறந்திருக்கலாம், ஆனால் நாங்கள் இன்னும் மறக்கவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் தளபதி 67 படத்திலும் ஹீரோவை விட வில்லன் கதாபாத்திரம் பவர்ஃபுல்லாக இருந்துவிடக் கூடாது என்பதே ரசிகர்களின் விருப்பம். மாஸ்டர் படத்தில் செய்ததையே தளபதி 67 படத்தில் லோகேஷ் செய்ய மாட்டார் என்று நம்பப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.