ஆச்சர்ய தகவல்! அணு குண்டு தாக்குதல் அச்சுறுத்தல் இல்லாத உலகின் 5 இடங்கள்..!!

ரஷ்யா – உக்ரைன் போர் தற்போது அணு ஆயுதத் தாக்குதல் குறித்த ஊகத்தை கிளப்பியுள்ளது. இது நடந்தால், பெரும்பாலான நாடுகளின் பெயர் உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போய் விடும். 

ரஷ்யாவில் அதிகபட்சமாக 4,600 அணுகுண்டுகள் உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக அமெரிக்க உள்ளது. இவ்வாறான நிலையில் நாட்டில் அணு ஆயுதப் போர் ஆரம்பித்தால் மக்கள் எங்கே சென்று உயிரைக் காப்பாற்றிக் கொள்வார்கள் என்பதுதான் கேள்வி. அணுசக்தி யுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்கக் கூடிய  ஐந்து பகுதிகள் உலகில் உள்ளன.

அண்டார்டிகா

உலகில் அணு ஆயுதப் போர் நடந்தால், அனைத்து நாடுகளும் அழிந்துவிடும் ஆனால் அண்டார்டிகா தப்பித்து விடும் என்று கூறப்படுகிறது. 1961 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வந்த ஒப்பந்தம் இந்த பனிக்கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ள  தடை செய்யப்பட்டுள்ளதே இதற்குக் காரணம். இந்த ஒப்பந்தத்தில் முதலில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சிலி, பிரான்ஸ், ஜப்பான், நியூசிலாந்து, நார்வே, தென்னாப்பிரிக்கா, சோவியத் யூனியன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை கையெழுத்திட்டன. பின்னர் பிரேசில், சீனா, ஜெர்மனி, வடகொரியா, போலந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!

அமெரிக்காவில் உள்ள கொலராடோ

அணுசக்தி யுத்தம் ஏற்பட்டால் அமெரிக்காவும் உலக வரைபடத்தில் இருந்து நீக்கப்படும், ஆனால் கொலராடோவின் மலைப் பகுதியில் உள்ள ஒரு மையம் பாதுகாப்பாக இருக்கும். மலைகளில் குகைகளை உருவாக்குவதன் மூலம் அமெரிக்க இராணுவம் அதன் சொந்த அணுசக்தி ஆதார உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. குகையின் நுழைவாயில் 25 டன் எடையுள்ள கதவுகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது, அணுகுண்டு மூலம் கூட வெடிக்க முடியாது. இந்த வளாகத்தில் வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளை (NORAD) மற்றும் அமெரிக்காவின் வடக்கு கட்டளை (NORAD) ஆகியவை உள்ளன. சோவியத் யூனியனின் குண்டுவெடிப்புகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதற்காக 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவால் இந்த இராணுவத் தளம் கட்டப்பட்டது.

ஐஸ்லாந்து 

ஐஸ்லாந்து வட துருவத்தில் உள்ள ஒரு சிறிய நாடு. ஆண்டு முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கும் ஐஸ்லாந்து, உலகின் பல பகுதிகளிலும் அரசியலைத் தவிர்த்து சுதந்திரமான நாடு. ஏனென்றால், உலகில் எந்த நாடும் ஐஸ்லாந்தைத் தங்கள் எதிரியாகப் பார்ப்பதில்லை. எனவே அணுகுண்டு தாக்குதலுக்கான வாய்ப்பு மிகக் குறைவு, இது உலகில் பாதுகாப்பான புகலிடமாக அமைகிறது.

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா ..!!!

குவாம்

குவாம் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு நாடு. இதன் மக்கள் தொகை 14,000 மட்டுமே. இராணுவத்தில் 1,300 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர், அதில் 260 பேர் மட்டுமே முழுநேர பணியாளர்கள். இந்த நாடு சுற்றுலாவை நம்பியே உள்ளது. உலகில் உள்ள இந்த சிறிய நாட்டை யாரும் தங்கள் எதிரியாக நினைப்பதில்லை. இந்நிலையில், அதன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. அதனால்தான் இது உலகின் பாதுகாப்பான பகுதிகளின் பட்டியலில் உள்ளது.

இஸ்ரேல் 

பல முஸ்லீம் நாடுகளின் எதிரி நாடாக உள்ள இஸ்ரேலை அழித்து விடும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும், அதையும் மீறி இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடக்க வாய்ப்புகள் மிக குறைவு. ஏனென்றால், இங்கு இஸ்லாம், கிறிஸ்தவம், யூத மதம் போன்றவற்றின் புராதன சின்னங்கள் உள்ளன. எந்த முஸ்லீம் அல்லது கிறிஸ்தவ நாடுகளும்  தாக்குதல் நடத்த விரும்பாது. அணு ஆயுதங்களிலிருந்து பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் அந்த நாடும் உள்ளது.

மேலும் படிக்க | உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி போலந்தில் தஞ்சம் புகுந்தார்; ரஷ்யா பரபரப்பு தகவல்

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.