தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் புதிதாக நியமனம் பெற்ற விரிவுரையாளர்களுக்கு பயிற்சி பட்டறை

புதிதாக நியமனம் பெற்ற விரிவுரையாளர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கான பயிற்சி பட்டறை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் இன்று (07) பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்றது.

ஊழியர்கள் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஏ. ஜெஃபர் ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற

இந்நிகழ்வின் பயிற்சி பட்டறையின் வளவாளராக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்துகொண்டு விரிவுரை நிகழ்த்தினார்.

இலங்கை போன்ற நாடுகளில் இத்தகைய விரிவுரையாளர்கள் பணி தொடர்பான, புதிய நோக்கம் , தேவையும் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது தொடர்பிலும் பொறுமையாக விருத்தி செய்ய வேண்டிய சமூக பிரிவினராக விரிவுரையாளர்கள் இனம் காணப்பட்டு உள்ளமை தொடர்பிலும் விரிவுரையாளர்கள் மிக விரிவான பாடத்திட்டங்களை தயாரித்து தொடர்ச்சியாக அவற்றை மீட்டு கொண்டிருத்தல் வேண்டும் என்று உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழக கல்வி நிறுவனங்களில் போதியளவு அறிவை வழங்குதல் மற்றும் போதுமானதன்று, அத்தகைய அறிவை நடைமுறை வாழ்வில் பிரயோகிப்பதற்கான தேர்ச்சிகளை விருத்தி செய்வதில் அதிக கவனம் செலுத்துதல், சமூக இலக்குகள், சமூக தொழிற்பாடுகள், சமூக அசைவியக்கம், சமூக முன்னேற்றம் போன்ற ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இயங்கியல் நடைமுறைகளில் மையச் சக்கரமாக தொழிற்படும் வினைத்திறனையும், விளைதிறனையும் தீர்மானிப்பவர்கள் விரிவுரையாளர்களே என்றும் விரிவுரையாளர்கள் என்ற நோக்கில் மாத்திரமின்றி சமூக மாற்றங்களை வழிப்படுத்துபவர்கள், விசைப்படுத்துபவர்கள், என்ற முறையிலும் முக்கியமானவர்கள்.

பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் விரிவுரையாளர்கள் இயல்பாக உயரிய சமூகத் தொடர்புகளை பெறுவதால், உயரிய சமூக அங்கீகாரத்தைப் பெறுகின்றன. பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் விரிவுரையாளர்களுக்கான சமூக அந்தஸ்து ஒப்பீட்டு ரீதியில் உயர்வானது என்றும் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.