ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்டில் பிளிப்கார்ட் டிவி அப்கிரேட் டேஸ் சேல் (Flipkart TV Upgrade Days Sale) மார்ச் 7 முதல் நடைபெறுகிறது. இதில் ஸ்மார்ட் டிவிகளில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த விற்பனையில், சாம்சங்கின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை வெறும் ரூ.5,999க்கு வாங்க முடியும். இதன் அசல் விலை ரூ.20,900 ஆகும். இந்த டீல் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
சாம்சங்கின் ஸ்மார்ட் டிவியை மலிவாக வாங்க இதை செய்யவும்
இந்த பிளிப்கார்ட் டீலில் சாம்சங் 80 செமீ (32 இஞ்ச்) எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ரிவி-யில் கிடைக்கும் சலுகைகள் பற்றி பேசப்பட்டுள்ளது. வலுவான டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட் டிவியின் விலை சந்தையில் ரூ. 20,900 ஆகும். எனினும் பிளிப்கார்டில் 11% தள்ளுபடிக்குப் பிறகு இந்த ஸ்மார்ட் டிவி ரூ.18,499க்கு கிடைக்கிறது.
ஃபெடரல் வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் இந்த ஸ்மார்ட் டிவியை வாங்க நீங்கள் பணம் செலுத்தினால், உங்களுக்கு 10%, அதாவது ரூ. 1,500 உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் இந்த சாம்சங் டிவியின் விலை ரூ.16,999 ஆக குறையும்.
மேலும் படிக்க | பெண்களுக்கு தேவையான முக்கியமான 5 சாதனங்கள்!
பரிமாற்றச் சலுகையை அனுபவிக்கவும்
இந்த பிளிப்கார்ட் டீலில் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. உங்கள் பழைய ஸ்மார்ட் டிவி-க்கு பதிலாக Samsung 80 cm (32 inch) HD Ready LED ஸ்மார்ட் டிவியை வாங்கினால், 11 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் பெற்றால், இந்த ஸ்மார்ட் டிவியை வெறும் ரூ.5,999க்கு வாங்க முடியும்.
ஸ்மார்ட் டிவியின் அம்சங்கள்
Samsung 80 cm (32 inch) HD Ready LED Smart TV ஆனது Tizen இயங்குதளத்தில் வேலை செய்கிறது. 32 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட் டிவி 1,366 x 768 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் எஹ்டி ரெடி எல்இடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் 60ஹர்ட்ச் புதுப்பிப்பு வீதமும் 20வாட் சவுண்ட் அவுட்புட்டும் கிடைக்கும். இந்த ஸ்மார்ட் டிவி நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் யூ டியூப் போன்ற பயன்பாடுகளையும் ஆதரிக்கிறது.
பிளிப்கார்டின் இந்த டிவி விற்பனையில் இன்னும் பல அற்புதமான சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம். பிளிப்கார்டின் இணையதளம் அல்லது பயன்பாட்டிலிருந்து இந்த சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | ரூ.50,000 Asus லேப்டாப் வெறும் 15,000 ரூபாய்க்கு விற்பனை: அசத்தும் அமேசான் சேல்