உலக அளவில் முதல் மூன்று நாடுகளில் இந்தியா இடம் பெற வாய்ப்பு; எந்தெந்த துறைகள்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: உலக அளவில் முதல் மூன்று நாடுகளில் இந்தியா இடம் பெறுவதற்கு உரிய வழிமுறைகள் உள்ளன என்றும் அது எந்தெந்த துறை என்றும் பிரதமர் மோடி கூறினார்.

வளர்ச்சிக்கான நிதி மற்றும் வளர விரும்பும் பொருளாதாரம்’ என்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

நூற்றாண்டுக்கு ஒருமுறை பாதிக்கும் பெருந்தொற்றுக்கு பின்னர் இந்திய பொருளாதாரம் மீண்டும் வேகமடைந்துள்ளது. இது நமது பொருளாதார முடிவுகள் மற்றும் பொருளாதாரத்தின் வலுவான அடிப்படையின் பிரதிபலிப்பாகும். இந்த பட்ஜெட்டில் உயர் வளர்ச்சி வேகத்தை பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

அந்நிய முதலீட்டு வரவுகளை ஊக்குவித்தல் உள்கட்டமைப்பு முதலீட்டுக்கு வரி குறைத்தல், என்ஐஐஎஃப், கிப்ட்சிட்டி, புதிய டிஎஃப்ஐ-க்கள் போன்ற அமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் நிதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த நாங்கள் முனைந்துள்ளோம்.

நிதித்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விரிவாக பயன்படுத்தும் அரசின் முயற்சி தற்போது அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது. 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் அல்லது 75 மாவட்டங்களில் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி ஆகியவற்றில் இந்த தொலைநோக்கை பிரதிபலிக்கும்.

நிதி சார்ந்த பல்வேறு திட்ட மாதிரிகளை வகுப்பதன் மூலம் பிற நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கும் வழிகளை கண்டறிவது அவசியம். பிரதம மந்திரி விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் இத்தகைய ஒரு நடவடிக்கை.

முன்னேற துடிக்கும் மாவட்டங்கள் திட்டம் அல்லது கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கை மேம்படுத்துதல் போன்றவை முன்னுரிமை திட்டங்கள்.
எம்எஸ்எம்இ-களை வலுப்படுத்த புதிய திட்டங்கள் மற்றும் பல அடிப்படை சீர்திருத்தங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

நிதி தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் நாடு முன்னேறும் வரை தொழில் 4.0-வுக்கு வாய்ப்பில்லை. இந்த துறைகளில் நிதி நிறுவனங்களின் உதவியானது இந்தியாவை தொழில் 4.0 –வின் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும்.

முதல் மூன்று நாடுகளில் இந்தியா இடம் பெறுவதற்கு உரிய வழிமுறைகள் உள்ளன. கட்டுமானம், ஸ்டார்ட் அப், அண்மையில் தொடங்கப்பட்ட ட்ரோன் துறை, விண்வெளி மற்றும் ஜியோ ஸ்பேஷியல் டேட்டா ஆகிய துறைகளில் இந்தியா முதல் 3 இடங்களை பிடிக்க முடியும். இதற்கு நமது தொழில் மற்றும் புதிய தொழில்முனைவோர் நிதித்துறையின் முழு ஆதரவை பெறுவது அவசியமாகும்.

தொழில்முனைவு விரிவாக்கம், புத்தாக்கம், ஸ்டார்ட் அப்புகளுக்கு புதிய சந்தைகளை தேடல் ஆகியவை இந்த துறைகளுக்கு வருங்காலத்தில் யார் நிதி அளிப்பார்கள் என்பது பற்றிய ஆழமான புரிந்துணர்வு இருக்க வேண்டும்.

நமது நிதித்துறை புதுமையான நிதி அளித்தல் மற்றும் புதிய வருங்கால எண்ணங்கள் மற்றும் முன்முயற்சிகளின் நீடித்த அபாய மேலாண்மையை கருத்தில் கொண்டிருக்கும்.

இந்திய பொருளாதாரத்தில் பெரிய அடிப்படை கிராமப்புற பொருளாதாரம் ஆகும். சுய உதவிக் குழுக்கள், உழவர் கடன் அட்டைகள், விவசாயி உற்பத்தி அமைப்புகள், பொது சேவை மையங்கள் ஆகியவற்றை வலுப்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிராமப்புற பொருளாதாரம் கொள்கைகளின் மையமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.