நல்லா பாருங்க… இது சேப்பாக்கம் இல்லை’ நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடித்த சூரத்!

CSK Team Entry In surat For Begin Training : 15-ஐபிஎல் தொடருக்கான பயிற்சிக்காக சூரத் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ந் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இதுவரை 8 அணிகள் பங்கேற்று வந்த இந்த தொடரில் குஜராத் மற்றும் லக்னோ என 2 புதிய அணிகள் இணைந்து தற்போது அணிகளின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. இந்த 10 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் மே 26-ந் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று பயிற்சியில் ஈடுபடுவதற்காக சூரத் மைதானத்தி்ற்கு சென்றது. இதில் கேப்டன், ​​எம்எஸ் தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பைப் கொடுத்தனர். ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான வீரர்களை பார்க்க தெருக்களில் திரண்டிருந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்த ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அம்பதி ராயுடு, கே.எம்.ஆசிப் ஆகியோர் கேப்டன் தோனியுடன் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.  இது தொடர்பான வீடியோ பதிவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சிஎஸ்கே நிர்வாகம் “அபார சுரத்! சிரிக்கும் அந்த கண்கள் நாம் செல்லும் இடமெல்லாம் மகிழ்ச்சியைத் தருகின்றன என்று பதிவிட்டுள்ளது.

இந்த தொடருக்கான ஏலம் கடந்த பிபரவரி மாதம் 12 மற்றும் 13-ந் தேதி பெங்களூர் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. 21 வீரர்கள் எடுக்க வேண்டிய சூழலில் ஏலத்தில் பங்கேற்ற சிஎஸ்கே நிர்வாகம்,  வேகப்பந்துவீச்சார் தீபக் சஹாரை 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இவரது விலை கேப்டன் தோனியை விட 2 கோடி அதிகம்.

ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி சென்னை அணிக்காக 4 முறை கோப்பையை வென்றுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் வெற்றிகரமான அணியாக இருப்பதற்கு காரணம் தோனிதான், அவர் தனது அணியின் முக்கிய வீரர்களை நம்பியதே இதற்கு முக்கிய காரணம். பல ஆண்டுகளாக முக்கிய வீரர்கள சிலரை சென்னை அணி தக்கவைத்து்ககொள்வதும் அவர்கள பல இக்கட்டான சூழலில் அணிக்கு வெற்றி தேடி தருவது சென்னை அணியில் வழக்கமான நிகழ்வுகளில் ஒன்று

மேலும் அடுத்த மூன்று ஐபிஎல் சீசன்களுக்கு தங்கள் நீண்ட கால கேப்டன் மகேந்திர சிங் தோனியை தக்கவைக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தோனியைத் தவிர (ரூ. 12 கோடி), சிஎஸ்கே வெற்றிக்காக முக்கியப் பங்கு வகித்த ஆல்-ரவுண்டர் இரட்டையர்களான ரவீந்திர ஜடேஜா (ரூ. 16 கோடி), மொயீன் அலி (ரூ. 8 கோடி), தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 6 கோடி) ஆகியோரை அந்த அணி தக்கவைத்துள்ளது. 2021-ல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்க உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.