பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றமும் மறுப்பு…

சென்னை: தனது பள்ளியில் படித்து வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள சில்மிஷ டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதி மன்றமும் மறுத்து விட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் பள்ளி மாணவி களிடம் பாலியல் சில்மிஷம் செய்தாக கொடுத்த புகாரின் போரில்  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவர் மீது அடுத்தடுத்து பல வழக்குகள் பாய்ந்துள்ளன. இதையடுத்து, அவர்   புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜாமின் வழங்கக்கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் பாபா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது மனுவில்,  உடல்நிலையை காரணம் காட்டி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் சிவசங்கர் பாபா மேல்முறையீடு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர், ‘ சிவசங்கர் பாபா பல நாட்களாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவருக்கு ஏற்கனவே ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வயது மூப்பால் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிவசங்கர் பாபாவுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்,’என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரச வழக்கறிஞர்,  ‘பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபா குற்றவாளி என்பதற்கான அனைத்து ஆதாரங் களும் உள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அழிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது,’ என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்ததுடன்,  சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கலாமா என்பது குறித்து தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.