வீட்டு மனைகள் குடும்பத் தலைவி பெயரிலே வழங்கப்படும்; மகளிர் தினத்தில் ஸ்டாலின் அறிவிப்பு

Tamil Nadu CM MK Stalin says women family heads will be beneficiaries in housing plan: இனிமேல், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வீட்டு மனைகள் குடும்பத் தலைவிகள் பெயரில் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

நேற்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில், திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், TNUHDB-ன் வீட்டுத்திட்டத்தின் கீழ், பயனாளி குடும்பத்திற்கு வழங்கப்படும் வீட்டு உரிமைப் பத்திரங்கள், குடும்ப தலைவிகளின் பெயரிலே வழங்கப்படும் என்று கூறினார்.

அப்போது, மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி தலைமையிலான முந்தைய திமுக ஆட்சியின் போது, ​​சமத்துவபுரத்தில் ஒதுக்கப்பட்ட வீடுகள், குடும்ப தலைவிகளின் பெயரில் வழங்கப்பட்டதை ஸ்டாலின் நினைவு கூர்ந்தார்.

முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கே.பழனிசாமி ஆகியோர் மகளிர் தின நிகழ்ச்சியில், கேக் வெட்டி, பெண் நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு வழங்கினர்.

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் காவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அவரது மனைவி மம்தா ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதேபோல், இந்திய விமான நிலைய ஆணையத்தால் சென்னை விமான நிலையத்தில் ஒரு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது, அங்கு விமானம் தரையிறங்குதல் மற்றும் புறப்படுதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் இயக்குவது பெண் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் திறம்பட செய்தனர்.

இதையும் படியுங்கள்: இன்னும் 30 ஆண்டுகளுக்கு ஸ்டாலினே முதல்வர்: சேகர்பாபு ஏற்பாடு செய்த விழாவில் நடிகை ரோஜா பேச்சு

சென்னையில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்தின் பிராந்திய தலைமையகம் மகளிர் தினத்தை ஆரவாரத்துடன் கொண்டாடியது மற்றும் அதன் அனைத்து ஏர் நேவிகேஷன் சர்வீசஸை (ANS) ‘ பெண் பணியாளர்களே செய்தனர்.

விமானம் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகியவை விமான சேவைகளில் முக்கிய பகுதியாகும், அதாவது திறன்களை தொடர்ந்து மேம்படுத்துதல் தேவைப்படும் மிகவும் சிறப்பு வாய்ந்த பகுதியாகும், இதனை மகளிர் தினத்தில் அனைத்து தரவரிசைகள் மற்றும் வயதுக் குழுக்களில் உள்ள பெண்களே கையாண்டனர் என்று AAI தெரிவித்துள்ளது.

மேலும், “மார்ச் 8 அன்று சென்னை விமானப் போக்குவரத்துச் சேவைகளில் ANS பிரிவுகளின் காலைப் பணிகள் முழுக்க முழுக்க பெண் பணியாளர்களைக் கொண்டு நிர்வகிக்கப்படுவதால் இது சிறப்பு வாய்ந்தது.” என்றும் AAI தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியான செயல்பாடுகள் பெண் ஊழியர்களின் தன்னம்பிக்கை, பெருமை மற்றும் கண்ணியத்தை வெளிப்படுத்தியது, இது ஐக்கிய நாடுகள் சபையின் 2022 கருப்பொருளான ‘நிலையான எதிர்காலத்திற்கான இன்றைய பாலின சமத்துவம்’ அடிப்படையில் அமைந்தது என்று AAI தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.