கோவா, உத்தரகாண்டில் கடும் இழுபறி- முன்னிலை நிலவரம்

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்று முடிந்துள்ள சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
கோவா மாநிலத்தில் இழுபறி நிலை காணப்படுகிறது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், பாஜக 18 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. திரினாமுல் காங்கிரஸ் 4 இடத்திலும் மற்றவை 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 30 இடங்களிலும், காங்கிரஸ் 23 இடங்களிலும் மற்ற கட்சிகள் 
4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் உள்ள  60  தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது முதல் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. அந்த கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது.  காங்கிரஸ் கட்சி 6 இடத்திலும், மற்றவை 10 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.