இடித்து அகற்றப்பட்டது புதுச்சேரியின் அடையாளம் – பொதுமக்கள் அதிர்ச்சி – வைரல் வீடியோ

புதுச்சேரி: புதுச்சேரியின் அடையாளமாக திகழ்ந்து வந்த மதகடிப்பட்டு முத்தமிழ் நுழைவு வாயில்,  சாலை விரிவாக்க பணிக்காக இடித்து நொறுக்கப்பட்டது. இது அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

புதுச்சேரியில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருவதைத்தொடர்ந்து சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளும் தொடங்கி உள்ளன. இதற்காக  பொதுப்பணித்துறை சார்பில் தற்போது அண்ணாநகர் பகுதியில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பில் செயற்கை கான்கிரீட் பாலம் அமைக்க   முடிவு செய்யப் பட்ட, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான 27 செயற்கை கான்கிரீட் பாலங்கள் (26 அடி தூண்டுகள்) செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாலம் அமைக்கும் பணி மார்ச் 7ந்தேதி  இரவு 11 மணிக்கு மேல் தொடங்கியது. வருகிற 13-ந் தேதிக்குள் பாலம் அமைக்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இந்த பணிகளை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், உதவி பொறியாளர் ராதாகிருஷ்ணன், இளநிலை பொறியாளர் சிவபிரகாசம் ஆகியோர் மேற்பார்வையில் சாலை விரிவாக்கம் பெணிகள் நடைபெற்றது.

இந்த பணிகளுக்காக ராட்சத கிரேன் மற்றும் நவீன எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சாலையோரம் உள்ள மரங்கள், கட்டிடங்கள் சிலைகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதைத்தொடர்ந்து, 4 வழிச்சாலையாக மாற்றும் வகையில்  மதகடிப்பட்டில் புதுச்சேரியின் அடையாளத்தை உலக நாடுகளுக்கு பிரபலப்படுத்தி வந்த புதுச்சேரி என்ற பெயருடைய முத்தமிழ் நுழைவாயில் மற்றும் அதன் அருகே உள்ள  காமராஜர் நினைவு தூண் பொக்லைன் இயந்திரத்தில் இடித்து அகற்றப்பட்டது.

இந்த நுழைவு வாயில் கடந்த 2005-ம் ஆண்டு பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்து. இது புதுச்சேரியின் அடையாளமாக இருந்து வந்தது. தற்போது அது அகற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய அதிகாரிகள், விழுப்புரம் – நாகை நான்கு வழிச்சாலைக்காக புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு, திருவண்டார்கோவில், திருபுவனை பகுதியில் சாலைகள் அகலப்படுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது அதன் காரணமாக இந்த நுழைவு வாயில் அகற்றப்பட்டுள்ளது. விரைவில் இதுபோன்ற நுழைவு வாயில் வேறு இடத்தில் அமைக்கப்படும்.  முத்தமிழ் நுழைவாயிலில் இருந்த  தமிழ்த்தாய் சிலை பத்திரமாக பாதுகாப்பாக  எடுத்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறி உள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.