'ஓடிபி' மூலம் பண மோசடி: துரிதமாக செயல்பட்டு மீட்ட காவல்துறை

ஓடிபி மூலம் வங்கிக் கணக்கு பணப் பரிமாற்ற மோசடி. ரூ. 30 ஆயிரம் திருடி செல்போன்கள் வாங்கிய மோசடி நபரிடமிருந்து செல்போனை மீட்ட அண்ணா நகர் சைபர் பிரிவு போலீசார், அதை பாதிக்கப்பட்டவரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர் கடந்த 05.03.2022 ஆம் தேதி அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தன்னுடைய ஐசிஐசிஐ வங்கியில் இணையவழி பணப் பரிவர்தனையின் போது தடங்கல் ஏற்பட்டது. இதனால் கூகுள் தேடல் உதவியுடன் வாடிக்கையாளர் சேவை மையத்தின் உதவி எண்ணை தொடர்புகொண்டேன்.
அப்போது அந்த தொடர்பு துண்டிக்கப்பட்டு சிறிது நேரத்தில் மற்றொரு எண்ணிலிருந்து ஐசிஐசிஐ வங்கியிலிருந்து பேசுவதாக அடையாளம் தெரியாத நபர் பேசினார். பின்னர் குறையை கேட்டறிந்து நபர் Any Desk Remote Desktop Software. App போனில் டவுன்லோடு செய்து கொள்ளும்படி கூறினார். நானும் செய்தேன்.
image
இதையடுத்து ஐசிஐசிஐ வங்கி மொபைல் ஆப்யை திறக்கச் சொன்னார். சிறிது நேரத்தில் என்னுடைய வங்கி கணக்கிலிருந்து ரூ.30,000 எடுக்கப்பட்டு விட்டது. அதிர்ச்சியடைந்து யோசித்த பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று புகாரில் தாமோதரன் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து புகாரின் பேரில் அண்ணாநகர் காவல் மாவட்ட துணை ஆணையர் சிவபிரசாத் உத்தரவின் பேரில், அண்ணாநகர் கணினிவழி குற்றதடுப்பு பிரிவின் மூலமாக விசாரணை நடத்தப்பட்டது. பிறகு பணப் பரிவர்த்தனையானது Flipkart Digital Gift Voucher மூலமாக மூன்று Realme C21 செல்போன்கள்   ஆர்டர் செய்து உடனடியாக 3 மணிநேரத்தில் டெலிவரி செய்யப்பட்டதாக FlipKart Payments  மூலமாக தெரியவந்ததது.
அண்ணாநகர் கணினிவழி குற்றதடுப்பு பிரிவினர் உடனடி நடவடிக்கை எடுத்ததன் பேரில் டெலிவரி செய்யப்பட்ட நபரை தொடர்புகொண்டு பணப் பரிவர்தனையின் மூலம் பெறப்பட்ட செல்போன்கள் கூரியர் மூலமாக மீட்கப்பட்டது. இதையடுத்து இன்று தாமோரதனிடம் மீட்கப்பட்ட செல்போன்களை அண்ணாநகர் காவல் மாவட்ட துணை ஆணையர் சிவபிரசாத் ஒப்படைத்தார்.
அண்ணாநகர் கணினிவழி குற்றதடுப்பு பிரிவினரின் துரீத செயல்பாட்டால் இழந்த பணம் செல்போன்களாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.