பஞ்சாப் வெற்றி எதிரொலி.. அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மன் போன்று உடையணிந்து வந்த சிறுவன்

ஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த மன் போன்று உடையணிந்து வந்த சிறுவனின் புகைப்படம், வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிக இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனை, அக்கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அக்கட்சியின் ஆதரவாளர் ஒருவரின் குழந்தை, தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் கெஜ்ரிவாலின் மப்ளர் மற்றும் பகவந்த் மன்-இன் மஞ்சள் தலைப்பாகையை பிரதிபலிக்கும் வகையில் உடையணிந்து வந்தது அக்கட்சியினரின் கவனத்தை ஈர்த்தது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.