பாக்ஸ்கான் உடன் கூட்டணி போட்ட ஏதர் எனர்ஜி.. ஓலா உடன் போட்டிக்கு தயார்..!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் இருக்கும் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்கப் பல முயற்சிகளைச் செய்து வருகிறது.

ரூ.6 லட்சம் கோடி அவுட்.. முதல் நாளே கஷ்ட காலம்.. ஏன்.. என்ன ஆச்சு..?

இந்நிலையில் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஏதர் எனர்ஜி சென்னை நிறுவனத்துடன் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது.

ஏதர் எனர்ஜி

ஏதர் எனர்ஜி

ஏதர் எனர்ஜி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் பாக்ஸ்கார்ன் டெக்னாலஜி குரூப்-ன் கிளை நிறுவனமான பாரத் FIH உடன் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தக் கூட்டணி மூலம் ஏதர் நிறுவனம் இதற்கு முன் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான முக்கிய உதிரிப்பாகங்களைத் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

உற்பத்தி

உற்பத்தி

இதன் மூலம் ஏதர் நிறுவனத்தின் வாகனங்களை வாங்கியவர்களுக்குச் சிறப்பான சேவையை அளிக்க முடியும் என நம்புகிறது. இது மட்டும் அல்லாமல் இந்தப் புதிய கூட்டணி மூலம் ஏதர் நிறுவனத்தின் உற்பத்தி தளத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் அதிகரித்து வரும் Ather 450X மற்றும் 450 Plus வாகனங்களுக்கான டிமாண்ட்-ஐ பூர்த்திச் செய்ய முடியும் என நம்புகிறது ஏதர் எனர்ஜி.

பாரத் எஃப்ஐஎச்
 

பாரத் எஃப்ஐஎச்

ஏதர் எனர்ஜி-யின் இந்தக் கூட்டாண்மையின் வாயிலாகப் பாரத் எஃப்ஐஎச் நிறுவனத்திடம் இருந்து பேட்டரி மேலாண்மை அமைப்புகள், டேஷ்போர்டு அசெம்பிளி, பெரிஃபெரல் கண்ட்ரோலிங் யூனிட்கள் மற்றும் டிரைவ் கண்ட்ரோல் மாட்யூல்களுக்கான பிரிண்டட் சர்க்யூட் போர்டு (பிசிபி) அசெம்பிளிகளை உள்ளடக்கிய பல உற்பத்தி சேவைகளைப் பெற உள்ளது.

ஓலா

ஓலா

எலக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவில் தற்போது ஓலா மட்டும் அல்லாமல் டிவிஎஸ், ஹீரோ உட்படப் பல நிறுவனங்கள் களத்தில் இறங்கியது மட்டும் அல்லாமல் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை வேகமாக மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஏதர் எனர்ஜி தனது உற்பத்தியை அதிகரிக்கப் பாரத் எப்ஐஎச் உடனான கூட்டணி பலன் அளிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ather Energy ties up with Bharat FIH to enhance the manufacturing ecosystem

Ather Energy ties up with Bharat FIH to enhance the manufacturing ecosystem பாக்ஸ்கான் உடன் கூட்டணி போட்ட ஏதர் எனர்ஜி.. ஓலா உடன் போட்டிக்கு தயார்..!

Story first published: Thursday, March 10, 2022, 8:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.