அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள்! ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 2வது நாளாக நடைபெறும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கான மாநாட்டில் கூறினார்.

தமிழக தலைநகர் சென்னையில், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் கலந்துகொள்ளும் 3 நாள் மாநாடு நேற்று (மார்ச் 10ந்தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நலத்திட்டங்கள், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த மாநாட்டின் 2வது நாள் கூட்டம் காலை 10 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  தொடங்கியது. இதில்,  மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் க கலந்து கொண்டுள்ளனர்..  2-வது நாளாக மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு தொடங்கியது.

மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் , மக்கள்தான் எஜமானர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது ஆகவே ஒரு ரூபாய் செலவு செய்தால் அந்த ஒரு ரூபாய் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தி லும் ஒவ்வொரு பொருட்கள் கிடைக்கிறது. அவற்றை எப்படி சந்தைப்படுத்தி அரசுக்கு வருமானம் பெறுவது, அனைவருக்கும் பயனளிக்கும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கருத்துக்களை எல்லாம் தெரிவிக்கலாம் கருத்துக்களை கேபதற்கு ஆர்வமாக இருக்கிறேன் என தெரிவித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.