நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்: யார் அவர்?

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் சட்டமன்றத் தேர்தலில் நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
சஹிஹாபாத் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் சுனில் குமார் சர்மா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் அமர்பால் சர்மாவை 2 லட்சத்து 14ஆயிரத்து 292 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங், நொய்டா தொகுதியில் 1,81,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
This is Sunil Sharma’s second consecutive highest victory margin in Uttar Pradesh, a feat he first achieved in 2017 by besting Amarpal Sharma, then Congress candidate, by 150,685 votes. (Sakib Ali/HT Photo)
இதற்குமுன் சட்டப்பேரவை தேர்தலில் தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார், மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்ததே தேசிய அளவில் சாதனையாக இருந்தது. தற்போது சுனில்குமார் சர்மா அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.