மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த 'ஜேம்ஸ்'… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்
புனித் ராஜ்குமார்
. மறைந்த பழம்பெரும் நடிகரான ராஜ்குமாரின் மகனான புனித் ராஜ் குமார் கன்னட சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்.

ஹீரோவாக 29 படங்களில் நடித்துள்ளார். அப்பு என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்தார் நடிகர் புனித் ராஜ்குமார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த புனித் திடீரென சரிந்து விழுந்தார்.

அந்தப் படத்தில் உண்டான கெமிஸ்ட்ரி.. பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருந்த பாலா… வைரலாகும் போட்டோ!

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட புனித் ராஜ்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்தது. புனித் ராஜ்குமாரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரசியல் வாரிசுடன் வெளிநாடு சுற்றுலா சென்ற இயக்குநர் பாலாவின் மனைவி… வெளியான பகீர் தகவல்!

பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் பெங்களூரில் உள்ள கண்டீரவா மைதானத்தில் 3 நாட்கள் வைக்கப்பட்டது. சுமார் 25 லட்சம் பேர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது பெற்றோர் சமாதிக்கு அருகிலேயே அவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் புனித் ராஜ்குமார் இறப்பதற்கு முன்பு கடைசியாக நடித்த ஜேம்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டப்பிங் பணிகளுக்கு முன்பே புனித் மரணமடைந்ததால் அவரது அண்ணனான ஷிவ்ராஜ்குமார் அவருக்காக டப்பிங் பேசினார்.

பாலாவின் மனைவி எம்பி ஒருவடன் அடிக்கடி டெல்லியில் தங்கினார்… பிரபல தயாரிப்பாளர் பகீர்!

இந்நிலையில் இப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சரத்குமாரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கன்னடம் மட்டுமின்றி தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பாலா ஒரு சேடிஸ்ட்… அழான நடிகைகளை பிடிக்காது.. அள்ளிவிட்ட பிரபல நடிகர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.