`யாரிந்த சாந்தனு ஹஸரிகா?' தன் காதலன் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன ஆச்சர்யத் தகவல்!

ஸ்ருதிஹாசன் தற்போது பல முன்னணி படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கின்றார். அதற்கு நடுவில் அவருக்கு பர்சனலாக பிடித்த இசை, புத்தகங்கள் இவற்றுக்கு நேரம் ஒதுக்குவதற்கும் தவறுவதில்லை. தற்போது கொரோனா தொற்றிலிருந்து மீண்டிருக்கும் ஸ்ருதி, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார். ஸ்ருதியின் இன்ஸ்டா ஸ்டோரி இப்போது வைரலாகி வரக் காரணம், அவரது நண்பரும் காதலருமான சாந்தனு ஹஸரிகா உடனான புகைப்படமே. இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்தவாறு எடுக்கப்பட்டிருக்கும் செல்பியை ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் ரியாக்ட் செய்து வருகிறார்கள்.

ஸ்ருதி, அக்ஷரா, சாந்தனு ஹஸரிகா

யார் இந்த சாந்தனு ஹஸரிகா

“இந்தக் கேள்வியை கூகுளில் தேடினால் கிடைக்கும் பதில்களுக்கு நான் விழுந்து விழுந்து சிரித்த்திருக்கிறேன்” என ஸ்ருதி பேட்டியொன்றில் குறிப்பிட்டுந்தார். சாந்தனு அடிப்படையில் ஒரு விஷுவல் ஆர்ட்டிஸ்ட். இவரது படைப்புகளை மட்டும் வைத்து மும்பை ஆர்ட் அண்ட் சோல் கேலரியில் கண்காட்சியொன்று பிப்ரவரியில் நடந்தது. BLCK என்று பெயரிடப்பட்ட கண்காட்சியின் தொடக்க நிகழ்வில் ஸ்ருதி கலந்து கொண்டு மியூஸிக்கல் பர்பார்ம் ஒன்றை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் அக்ஷராவும் உடன் இருந்தார்.

“நாங்கள் ஒருவருக்கு ஒருவர் எங்களுக்கே முழுமையாக தெரியாத ஏதோ ஒரு வகையில் இன்ஸ்பயர் ஆகிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மிக நிச்சயமாக இது தான் எங்கள் கலை ரீதியான ஆர்வத்திற்கும் அலைதலுக்கும் அடிப்படையாக இருக்கிறது. எங்கள் இருவருக்குமே கலையை உருவாக்க பிடிக்கும். அது தான் எங்களை இணைந்திருக்கிறது” என சாந்தனு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

ஸ்ருதியின் இன்ஸ்டா ஸ்டோரி

ஸ்ருதிஹாசன் தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவியோடு நடிக்கவிருக்கும் ‘மெகா 154’ படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே Salaar படத்தில் பிரபாஸ் உடன் நடித்து வருகிறார். ஆக்ஷன் திரில்லரான இந்தப் படம் புஷ்பாவைப் போல இரண்டு பாகங்களாக தயாராகவுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.