ஒரே நாளில் 81 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றி சவுதி அதிரடி


 சவுதி அரேபியாவில் இன்று ஒரேநாளில் கொலைக் குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 81 கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றது உட்பட பல்வேறு குற்றங்களில் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என அரசு நடத்தும் சவுதி பத்திரிகை நிறுவனம் அறிவித்துள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் சிலர் அல்-கொய்தா, ஐ.எஸ் குழு மற்றும் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ஆதரவாளர்களும் அடங்குவார்கள் என சவுதி அரசு தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கறிஞரை நியமித்துக்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது மற்றும் நீதித்துறை செயல்பாட்டின் போது சவுதி சட்டத்தின் கீழ் அவர்களின் முழு உரிமைகளும் உத்தரவாதம் செய்யப்பட்டன.

ஏராளமான பொதுமக்கள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளைக் கொன்ற பல கொடூரமான குற்றங்களைச் செய்ததற்காக, அவர்கள் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டனர் என சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத சித்தாந்தங்களுக்கு எதிராக சவுதி தொடர்ந்து கண்டிப்பான மற்றும் அசைக்க முடியாத நிலைப்பாட்டை எடுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடைசியாக சவுதியில் 2016 ஜனவரி மாதம் பெரியளவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய Shiite மதகுரு உட்பட மொத்தம் 47 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது நினைவுக் கூரத்தக்கது.                      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.