பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்தது. இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா  மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் அபாரமாக ஆடி சதம் அடித்தனர்.

இரண்டாவதாக பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆட்டத்தின் 37வது ஓவரில், அலட்சியமாக ஓடி 2வது ரன்னை எடுக்க முயன்ற வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை செடீன் நேஷனை இந்திய வீராங்கனைகள் மின்னல் வேகத்தில் ரன் அவுட் ஆக்கிய காணொளி வைரல் ஆனது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.