திமுக கவுன்சிலர் 2 வாக்குகள் பதிவு செய்ததாக வழக்கு – தேர்தல் ஆணையர் விளக்கமளிக்க உத்தரவு

திருச்சி அருகே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் , திமுக கவுன்சிலர் 2 வாக்கினை பதிவு செய்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியில், 56-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட மஞ்சுளா தேவி என்பவர் இரண்டு இடங்களில் வாக்குப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது. 646-வது வாக்குசாவடியில் தனது வாக்கினை பதிவு செய்த மஞ்சுளா தேவி, 647-வது வாக்குசாவடியில் முத்துலட்சுமி என்பவரின் வாக்கினையும் பதிவு செய்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவரின் வெற்றியை, செல்லாது என்று அறிவிக்கக்கோரி எதிர்க்கட்சியினர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
image
இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாநில தேர்தல் ஆணையர் ஜூன் 10-ம்தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: 2024 தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளிடம் உள்ள வாய்ப்புகள் என்ன? – அலசல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.