குதிரை வால் சடைக்கு தடை: பள்ளி மாணவிகள் அதிர்ச்சி!

ஜப்பானில் உள்ள
பள்ளிகள்
, மாணவிகள் பள்ளிக்கு குதிரை வால் (Ponytails) வகை சிகையலங்காரத்தில் வருவதற்கு தடை விதித்துள்ளது. குதிரை வால் வகை சிகையலங்காரத்தில் பள்ளிக்கு வரும்போது மாணவிகளின் கழுத்து பகுதி மாணவர்களுக்கு பாலியல் உணர்ச்சியை தூண்டும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதாஅக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய பள்ளிகள் இதுபோன்ற அபத்தமான, கடுமையான விதிகளை விதிப்பதில் பிரபலமானவை. காலுறைகளின் நீளம் தொடங்கி உள்ளாடைகளின் நிறம் வரை, ஜப்பானிய பள்ளிகள் இதுபோன்ற அபத்தமான பல விதிகளைக் கொண்டு வந்துள்ளன. அந்த வகையில், குதிரை வால் சடைக்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. ஆனாலும், பள்ளிகள் அதனை கண்டு கொள்வதாயில்லை.

ஜப்பான்
பள்ளிகளில் சுமார் 11 ஆண்டுகள் பணிபுரிந்த முன்னாள் ஆசிரியை ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மாணவிகளின் கழுத்து பகுதி மாணவர்களுக்கு பாலியல் உணர்ச்சியை தூண்டும் என்பதால், பல பள்ளிகள் குதிரைவால் சடைக்கு தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்தே இந்த விவகாரம் ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

முடிவுக்கு வருமா யுத்தம்? உக்ரைன் – ரஷ்யா 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை!

“மாணவர்கள், மாணவிகளை பார்ப்பார்கள் என்று பள்ளிகள் கவலைப்படுகின்றன. வெள்ளை நிறத்தில் மட்டுமே உள்ளாடைகள் அணிய வேண்டும் என்ற விதிக்கும் அதுவே காரணமாக அமைந்தது. இந்த விதிமுறைகளுக்கு எதிராக குறைந்த அளவிலேயே விமர்சனங்கள் எழுகின்றன என்பதால், அத்தனை விதிகளையும் மாணவர்கள் ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.” என்று அந்த ஆசிரியை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, 2020 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, ஃபுகுவோகாவின் தெற்கு மாகாணத்தில் உள்ள பத்து பள்ளிகளில் ஒரு பள்ளியேனும் குதிரைவால் சடைக்கு தடை விதித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

ஜப்பானிய பள்ளிகளில் இது ஒன்று மட்டுமே தன்னிச்சையான மற்றும் பிற்போக்குத்தனமான விதிகள் அல்ல. உண்மையில், ஜப்பானிய பள்ளிகள் இதுபோன்ற பல கடுமையான விதிகளை விதித்துள்ளன. ஆனாலும், அதற்கான காரணங்களோ விளக்கங்களோ மாணவர்களுக்கு தரப்படாது. எடுத்துக்காட்டாக, பள்ளிகளில் அமலில் உள்ள குதிரைவால் சிகை அலங்காரம் எந்த அளவுக்கு மாணவிகளின் கழுத்துப் பகுதியை வெளிப்படுத்துகிறதோ அதே அளவுக்கு வெளிப்படுத்தும் பாப் (bob hairstyle) சிகை அலங்காரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், அண்டர்கட் எனும் சிகை அலங்காரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்கள் தலைமுடிக்கு ‘டை’ அடிக்க அனுமதி கிடையாது. மாணவர்களின் தலைமுடி இயற்கையாகவே கருப்பாகவோ அல்லது ஏதாவது ஒரு ஸ்டைலில் இருக்கும்பட்சத்தில் அதனை அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்பது ஜப்பானிய பள்ளிகளில் இருக்கும் விதி. மெய்ஜி பல்கலைக்கழகத்தின் சமூகவியலின் இணைப் பேராசிரியரான அசாவோ நைட்டோவின் கூற்றுப்படி, “இந்த விதிகள் பள்ளிக்கு பள்ளி மாறுபடும். ஆனால் இந்த விதிகளின் நோக்கம் என்னவென்றால், அதிலிருந்து யாரும் தனித்து நிற்காமல் இருப்பதை உறுதி செய்வதே ஆகும்.” என்கிறார்.

இந்த அபத்தமான விதிகள் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பல ஆண்டுகளாக அந்நாட்டில் விதிக்கும் விதிகளை போன்றே உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. டை அடிக்கப்பட்ட ஸ்பைக் வகை சிகை அலங்காரத்துக்கு அவர் அண்மையில் தடை விதித்தார். வடகொரியாவின் புதிய சட்டங்களின்படி, அங்கீகரிக்கப்பட்ட 215 சிகை அலங்காரங்களில் ஒன்றை மட்டுமே ஆண்களும் பெண்களும் வைத்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.