சீனாவில் கடுமையான லாக்டவுன்.. 18 மாகாணத்தில் கொரோனா தொற்று.. இந்தியாவுக்கு என்ன பொருளாதார பாதிப்பு?

உலக நாடுகளில் கொரோனா, ஒமிக்ரான் தொற்று வேகமாகக் குறைந்து வரும் காரணத்தால் லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறைந்து விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

ஏற்கனவே சீன வேக்சின் மீது கடுமையான விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாகப் பரவத் துவங்கியுள்ளது.

சீனா அதிபர் ஜி ஜின்பிங்

சீனா அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு கடந்த மாதம் கொரோனா தொற்று காரணமாக பைஸ் (Baise) என்னும் தெற்கு சீன பகுதியில் இருக்கும் ஒரு சிறு நகரத்தில் கடுமையான லாக்டவுன் அறிவித்தது மறக்க முடியாது. பைஸ் லாக்டவுன் மூலம் சர்வதேச சந்தையில் பல துறைக்கு முக்கிய உற்பத்தி மூலப்பொருளாக இருக்கும் அலுமினிய உலோகத்தின் விலை ராக்கெட் வேகத்தில் விலை உயர்ந்து 14 ஆண்டு உச்சத்தைத் தொட்டது.

 ஒமிக்ரான், டெல்டா தொற்று

ஒமிக்ரான், டெல்டா தொற்று

இந்நிலையில் தற்போது சீனாவில் சுமார் 18 மாகாணத்தில் ஒமிக்ரான், டெல்டா வகைக் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது, ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 3400 பேருக்குக் கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 முக்கிய நகரங்கள்
 

முக்கிய நகரங்கள்

இதன் மூலம் ஷாங்காய் நகரத்தில் பள்ளிகள் மூடல், தெற்கு சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான ஷென்சென் (Shenzhen), பல வடகிழக்கு நகரங்களில் கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

 ஷென்சென்

ஷென்சென்

ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள சீன அரசு அறிவிப்பில் ஷென்சென் (Shenzhen) பகுதியில் இருக்கும் வர்த்தகத் தளங்கள் அனைத்தையும் மூட உத்தரவிட்டு உள்ளது. இந்த ஷென்சென் (Shenzhen) பகுதியில் மட்டும் சுமார் 17.5 மில்லியன் மக்கள் உள்ளனர். இதேபோல் சீன அரசு ஷென்சென் (Shenzhen) பகுதிக்குப் பஸ் போக்குவரத்தை குறைத்துள்ளது.

 முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

ஞாயிற்றுக்கிழமை நிலவரத்தின் படி சீனா மற்றும் ஹாங்காங் -ல் சுமார் 32000 பேருக்கு ஒமிக்ரான் மற்றும் டெல்டா வகை வைரஸ் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஷென்சென் பகுதியில் தான் ஹூவாய், எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான BYD, Ping An இன்சூரன்ஸ், டென்சென்ட் ஹோல்டிங்க்ஸ், வீசாட் எனப் பல முன்னணி நிறுவனங்கள் உள்ளது.

 மக்களுக்குக் கட்டுப்பாடு

மக்களுக்குக் கட்டுப்பாடு

சீன அரசு மக்களுக்குத் தேவையின்றிப் பொதுமக்கள் வெளியேற வேண்டாம் என உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முதல் இன்டர்சிட்டி பஸ் சேவை நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

 18 மாகாணங்கள்

18 மாகாணங்கள்

இந்தக் கொரோனா தொற்றுக் காரணமாகச் சீனாவில் சுமார் 18 மாகாணத்தில் தொற்று நிறைந்த பகுதிகளுக்குக் கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், உற்பத்தி, விநியோகம், போக்குவரத்து, ஏற்றுமதி, நிர்வாகப் பணிகள், புதிய முதலீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

 ரஷ்யா - உக்ரைன்

ரஷ்யா – உக்ரைன்

சீனாவின் இந்தக் கடுமையான லாக்டவுன் சர்வதேச சந்தையை உடனடியாகப் பாதிக்காவிட்டாலும், அடுத்தச் சில நாட்களில் இதன் தாக்கம் கட்டாயம் தெரியும். ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் ஏற்கனவே கடுமையான விநியோக சங்கிலி பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது சீனாவும் உலக நாடுகள் பாதிக்கத் துவங்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

China Lockdown: Millions locked in-home, Shenzhen business center shuts; How it Impacts India?

China Lockdown: Millions locked in-home, Shenzhen business center shuts; How it Impacts India? சீனாவில் கடுமையான லாக்டவுன்.. 18 மாகாணத்தில் கொரோனா தொற்று.. இந்தியாவுக்கு என்ன பாதிப்பு..?

Story first published: Monday, March 14, 2022, 9:55 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.