Flipkart-இல் தொடங்கிய புதிய Realme 5ஜி போன்களின் விற்பனை!

ரியல்மி நிறுவனம், Realme 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை மார்ச் 10ஆம் தேதி இந்தியாவில் வெளியிட்டது. சமீபத்தில் நிறுவனம் ரியல்மி 9 ப்ரோ, ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 9 சீரிஸில் குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகிறது. அந்தவகையில், குறைந்த விலை ரியல்மி 5ஜி போனான,
Realme 9 5G
ஸ்மார்ட்போனில், 90Hz ரெப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே,
Mediatek Dimensity
810 புராசஸர், 5000mAh பேட்டரி போன்ற மேம்பட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ரியல்மி SE போனைப் பொருத்தவரை, 144Hz ரெப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளேம்
Qualcomm Snapdragon
778ஜி புராசஸர், 5000mAh பேட்டரி போன்ற சிறப்பம்சங்கள் உள்ளது.

ரியல்மி 9 5ஜி சிறப்பம்சங்கள் (Realme 9 5G Features)

ரியல்மி 9 5ஜி போனில் 6.5″ அங்குல முழு அளவு எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே, 144Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் ஆதரவைப் பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்ட ரியல்மி UI 2.0 ஸ்கின் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. மீடியாடெக் டிமென்சிட்டி 810 5ஜி புராசஸர் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மாலி கிராபிக்ஸ் எஞ்சினும் கூடுதல் பலத்தைச் சேர்க்கிறது.

பின்பக்கத்தில் மூன்று கேமராக்களைக் கொண்ட ரியல்மி 9 எஸ்இ, முதன்மை சென்சாராக Samsung 48 மெகாபிக்சல் f/1.8 அபெர்ச்சர் உடனும், 2 மெகாபிக்சல் பிளாக் அண்ட் வைட் சென்சார் f/2.4 அபெர்ச்சர் உடனும், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் f/2.4 அபெர்ச்சர் உடனும் இருக்கிறது. செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் Sony IMX471, f/2.1 அபெர்ச்சர் கொண்ட கேமரா வழங்கப்பட்டுள்ளது.

11ஜிபி வரை டர்போ ரேம் – விற்பனைக்கு வந்த Poco M4 Pro ஸ்மார்ட்போன்!

ஸ்மார்ட்போனின் செயல்திறனை ஊக்குவிக்க 4ஜிபி, 6ஜிபி என இரு ரேம் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரியாக 64ஜிபி, 128GB ஆகிய இரு விருப்பத் தேர்வுகள் கொடுக்கப்படுகிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5000mAh லித்தியம் பாலிமர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 18W டார்ட் சார்ஜர் போனுடன் கொடுக்கப்படுகிறது.
மேலும் படிக்க

ரியல்மி 9 5ஜி எஸ்இ அம்சங்கள் (Realme 9 5G SE specs)

ரியல்மி 9 எஸ்இ போனில் 6.6″ அங்குல முழு அளவு எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 144Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் ஆதரவைப் பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்ட ரியல்மி UI 2.0 ஸ்கின் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. மிட் ரேஞ் ஸ்மார்ட்போன்களின் நாயகன் என்று கூறப்படும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G புராசஸர் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. அட்ரினோ 642L கிராபிக்ஸ் எஞ்சினும் கூடுதல் பலத்தைச் சேர்க்கிறது.

பின்பக்கத்தில் மூன்று கேமராக்களைக் கொண்ட ரியல்மி 9 எஸ்இ ஸ்மார்ட்போன் முதன்மை சென்சாராக Samsung 48 மெகாபிக்சல் f/1.8 அபெர்ச்சர் உடனும், 2 மெகாபிக்சல் பிளாக் அண்ட் வைட் சென்சார் f/2.4 அபெர்ச்சர் உடனும், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் f/2.4 அபெர்ச்சர் உடனும் இருக்கிறது. செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் Sony IMX471, f/2.1 அபெர்ச்சர் கொண்ட கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கடைகளில் விற்பனைக்கு வந்த JioPhone Next மொபைல் – விலை ரொம்ப கம்மி!

ஸ்மார்ட்போனின் செயல்திறனை ஊக்குவிக்க 6ஜிபி, 8ஜிபி என இரு ரேம் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரியாக 128GB கொடுக்கப்படுகிறது. இதனை எஸ்டி கார்ட் ஆதரவு கொண்டு, 1TB வரை நாம் நீட்டிக்க முடியும். புதிய ரியல்மி ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5000mAh லித்தியம் பாலிமர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 30W டார்ட் சார்ஜர் போனுடன் கொடுக்கப்படுகிறது.
மேலும் படிக்க

ரியல்மி 9 5ஜி மற்றும் 9 5ஜி எஸ்இ விலை (Realme 9 5G and 9 SE 5G price in india)

Meteor Black, StarGaze White ஆகிய இரு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. இதன் 4ஜிபி ரேம் + 64 ஸ்டோரேஜ் மெமரி வேரியண்டின் விலை ரூ.14,999 ஆகவும், 6ஜிபி ரேம் + 128 ஸ்டோரேஜ் மெமரி வேரியண்டின் விலை ரூ.17,499 ஆகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

Azure Glow, Starry Glow ஆகிய இரு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. இதன் 6ஜிபி ரேம் + 128 ஸ்டோரேஜ் மெமரி வேரியண்டின் விலை ரூ.19,999 ஆகவும், 8ஜிபி ரேம் + 128 ஸ்டோரேஜ் மெமரி வேரியண்டின் விலை ரூ.22,999 ஆகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

Read more:
Metaverse போன் கேள்வி பட்டிருக்கீங்களா – தொழில்நுட்ப புரட்சிAndroid 12L அப்டேட்: மொழி எதுவானாலும் சரி; நாங்க தரமா காட்டுவோம்!Apple இப்படி செஞ்சிருக்கக் கூடாது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.