Tamil News Today Live: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு அரசு நிச்சயம் உதவும்.. மத்திய கல்வி அமைச்சர் உறுதி!

Tamil Nadu News Updates: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மிட்சல் ஒபாமாவுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளது

இன்று உக்ரைன்- ரஷ்யா 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை

உக்ரைனின் முக்கிய நகரங்களை சுற்றிவளைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைன்- ரஷ்யா இடையேயான 4வது கட்ட பேச்சுவார்த்தை காணொலி வாயிலாக இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் 130வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் ரூ101.40-க்கும், டீசல் ரூ91.43-க்கும் விற்பனையாகிறது.

ஒபாமாவுக்கு கொரோனா

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மிட்சல் ஒபாமாவுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளது

கட்சியின் தலைவராக சோனியா தொடருவார்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே தொடருவார் என டெல்லியில் நடந்த அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தொடர் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப்பகுதியில் 6.7 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவாகியுள்ளது.

Live Updates
14:15 (IST) 14 Mar 2022
12 -14 வயது வரையிலான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி!

இந்தியாவில் 12 -14 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசியும், 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.

14:02 (IST) 14 Mar 2022
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு அரசு நிச்சயம் உதவும்!

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர மத்திய அரசு நிச்சயம் உதவும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்துள்ளார்.

13:44 (IST) 14 Mar 2022
நியூட்ரினோ திட்டம்.. மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க கூடாது. நியூட்ரினோ திட்டத்தால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

13:44 (IST) 14 Mar 2022
வன உயிரினங்கள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பு.. ஆ. ராசா கோரிக்கை!

வன உயிரினங்கள் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் என திமுக எம்.பி. ஆ.ராசா, நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

13:25 (IST) 14 Mar 2022
இந்தியாவில் பெட்ரோல் விலை 5% மட்டுமே உயர்வு!

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பெட்ரோல் விலையை உயர்த்திய போதும், இந்தியா உயர்த்தவில்லை. பிற நாடுகள் பெட்ரோல் விலையை 50%க்கு மேல் உயர்த்திய போதும், இந்தியாவில் 5% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பாராளுமன்றத்தில் பேசினார்.

13:24 (IST) 14 Mar 2022
ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு!

ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்ததை எதிர்த்து, வருமான வரித்துறை மேல்முறையீடு செய்த மனுவில் தீபா, தீபக்கை சேர்த்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

12:59 (IST) 14 Mar 2022
மைதானத்தில் நுழைந்த நான்கு பேர் மீது வழக்குப் பதிவு

பெங்களூரில் நடக்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது மைதானத்தில் நுழைந்து செஃல்பி எடுத்துக் கொண்ட நான்கு இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

12:35 (IST) 14 Mar 2022
இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும்

தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும். தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் 16ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

12:33 (IST) 14 Mar 2022
மேகதாதுவில் அணை கட்ட கூடாது – தம்பிதுரை

மேகதாதுவில் அணை கட்டுவது தமிழக விவசாயிகளை பாதிக்கும். அண்டை மாநிலங்களில் ஒப்புதல் இன்றி அணை கட்ட எப்படி நிதி ஒதுக்க இயலும்? மேகதாதுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை பேச்சு

12:32 (IST) 14 Mar 2022
தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டது முறையல்ல – டி.ஆர். பாலு

தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டது முறையல்ல. பழைய வட்டி விகிதத்தையே மீண்டும் வழங்க வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்.பி. டி. ஆர். பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.

11:42 (IST) 14 Mar 2022
வேளாண் பட்ஜெட் தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது

வேளாண் பட்ஜெட் தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகள் கட்டாயம் பட்ஜெட்டில் இடம் பெறும் என்று வேளாந்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

11:41 (IST) 14 Mar 2022
இன்று மதியம் லோக் ஆயுக்தா ஆலோசனை கூட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மதியம் லோக் ஆயுக்தா ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

11:40 (IST) 14 Mar 2022
புதிய வட்டார கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர்

சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்டப் பணிகளை துவங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது புதிய வட்டார கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர்

10:47 (IST) 14 Mar 2022
சென்னை தரமணியில் டி.எல்.எஃப் வளாக கட்டிடத்திற்கு முதல்வர் அடிக்கல்

சென்னை தரமணியில் சுமார் ரூ.5,000 கோடி முதலீட்டில் டிஎல்எஃப் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இணைந்து கட்டப்படவுள்ள அலுவலக வளாகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

10:29 (IST) 14 Mar 2022
கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம்

எதிர்கட்சியோ, ஆளுங்கட்சியோ மக்களுக்காக பணி ஆற்றி வருகிறோம் . நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு மக்கள் திமுக மீது வைத்த நம்பிக்கையை காட்டுகிறது கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

09:54 (IST) 14 Mar 2022
புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

புதுச்சேரியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக போனஸ் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

09:20 (IST) 14 Mar 2022
கடந்த 24 மணி நேரத்தில் 2,503 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 27 பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போது 36,168 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர்

09:11 (IST) 14 Mar 2022
இன்று முதல் TET-க்கு விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 13ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் ltrb.tn.nic.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

08:36 (IST) 14 Mar 2022
இன்று முதல் பட்ஜெட் தொடரின் 2வது அமர்வு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆவது அமர்வு இன்று தொடங்கி, ஏப்ரல் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11 வரை நடைபெற்று முடிந்தது.

08:26 (IST) 14 Mar 2022
ஜூன் 3 விக்ரம் திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியீடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

08:20 (IST) 14 Mar 2022
கனடாவில் இந்திய மாணவர்கள் 5 பேர் சாலை விபத்தில் உயிரிழப்பு

கனடா நாட்டின் டொரோண்டோ நகரில் சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இறந்த மாணவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.