கால்நடைகளுக்கு ம.பி., அரசு புதிய திட்டம்| Dinamalar

போபால்:கால்நடைகளின் மருத்துவ சிகிச்சைக்கு, ஆம்புலன்சை பயன்படுத்தும் திட்டத்தை மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:மக்கள், அவசர மருத்துவ உதவிக்கு 108 என்ற எண்ணில் ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைக்கின்றனர். அதுபோல கால்நடைகளுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சைக்கு நடமாடும் கால்நடை உதவி வாகனம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த வாகனத்தில் ஒரு கால்நடை மருத்துவர், உதவியாளர், டிரைவர் ஆகியோர் இருப்பர். கால்நடைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ தொலைபேசி எண் அறிவிக்கப்படும். இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் உடனடியாக, அதற்கான ஆம்புலன்ஸ் உதவிக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.