அணு குண்டு அச்சம்; பொட்டாசியம் அயோடைடு மாத்திரைகள் வாங்க மக்கள் அலைமோதுவது ஏன்..!!

ரஷ்யாவின் தாக்குதல்கள் உக்ரைனில் அழிவை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்காவில் ஒரு மருந்து விற்பனை இது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்த மருந்தின் பெயர் பொட்டாசியம் அயோடைட். பெரும்பாலான அமெரிக்க மக்கள் இந்த மருந்தை வாங்குகிறார்கள். ரஷ்யா அணு ஆயுதப் போரை நடத்த கூடும்  என்ற அச்சத்திற்கு மத்தியில், இந்த மருந்து அனு குண்டினால் ஏற்படும் கதிர் வீச்சில் இருந்து காக்கும் என கருதப்படும் நிலையில், இதனை வாங்க மக்கள் அலைமோதுகின்றனர்.

அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள் அச்சத்தின் காரணமாக பொட்டாசியம் அயோடைட் மாத்திரைகளை வாங்கிச் செல்கின்றனர். அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டால், லட்சக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும் என்பதோடு, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து வெகு தொலைவில் வாழும் மக்களும் கதிர்வீச்சுக்கு ஆளாக நேரிடும். 

பொட்டாசியம் அயோடைட்  மாத்திரைகள் கதிர்வீச்சுக்குப் பிறகு ஏற்படும் கதிர்வீச்சின் நச்சு விளைவுகளை குறைக்கின்றன என்று சிலர் நம்புகிறார்கள்.  ஆனால்,  தேவை இல்லாத நிலையில் இந்த மாத்திரையை அதிகமாக உட்கொண்டால், அது அவருக்கு ஆபத்தானது எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மருந்தின் விற்பனை திடீரென அதிகரித்துள்ளதால் அதன் விலையும் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | ரஷ்யா – உக்ரைன் போர்: கிவ் நகரில் மார்ச் 17ம் தேதி வரை ஊரங்கு உத்தரவு அமல்

முன்னதாக ரூபாய் மதிப்பில் 1070 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்ட மருந்து, தற்போது அதன் விலை 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது தவிர, இந்த மருந்து பல இடங்களில் கையிருப்பில் இல்லை.

இந்த மருந்தை அதிகமாக உட்கொள்வது தீங்கு விளைவிக்கும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) மேலும்  எச்சரித்துள்ளது. டோஸ் பொட்டாசியம் அயோடைடு மாத்திரை. தைராய்டு சுரப்பியை 24 மணிநேரம் வரை கதிர் வீச்சில் இருந்து பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது, ஆனால் அதிகப்படியான அளவு  தைராய்டு சுரப்பியில் சேதத்தை ஏற்படுத்தும் என CDC எச்சரித்துள்ளது

கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்காவில் பொட்டாசியம் அயோடைட்டின் தேவை திடீரென அதிகரித்தது. அப்போது ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஃபுகிஷாமா அணுமின் நிலையம் சேதமடைந்தது. அப்போதும் கூட  கதிர்வீச்சு தாக்கம் அச்சத்தின் காரணமாக இந்த மருந்தின் விற்பனை அதிகரித்தது. 

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.