திரைக்கதை எழுத மக்களிடம் செல்லுங்கள்! #MyVikatan

ஸ்டார்பக்ஸ் காப்பிக்கடை இல்லை. கருவாடு சுமந்த கட்டைப்பை இல்லை. பயணிகள் வருகை இல்லை. அட…விமானங்கள் கூட வருவது இல்லை. இருந்தாலும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கட்டுப்பாட்டை அறையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். பணியாளர் அடிக்கடி தரையைப் பெருக்கி துடைத்து பளிங்கு போல் வைத்திருக்கிறார். ஸ்டெப்னேகெர்ட் எனும் விமானநிலையம் இன்றளவும் விமானங்களின் வருகைக்காக காத்திருக்கிறது.

13வது பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவில் ஐந்தாம் நாள் திரையிடலில் ‘ஐங்குறுநூறு’ போல் காட்சியளித்தது ‘சுட் த விண்ட் டிராப்’ [Should the Wind Drop].ஸ்டெப்னேகெர்ட் விமானநிலையத்தின் நிலையை மிக அழகாக திரையில் ஒரு துன்பியல் கவிதை போல் படைத்துள்ளார் இயக்குநர் நோரா மார்தாரோசியன்.

‘சுட் த விண்ட் டிராப்’ என்ற தலைப்பிலேயே இலக்கியத்தை புனைந்தவர் படத்தின் ஒவ்வொரு சட்டகத்தையும் ஓவியமாக்கி இருக்கிறார். ஒளி ஓவியரின் சிமோன் ரோகா படைத்த ஓவியங்களுக்கு இணையாக பக்க வாத்தியம் அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் Pierre-Yves Cruad.

Should the Wind Drop
Should the Wind Drop
Should the Wind Drop
Should the Wind Drop
Should the Wind Drop
Should the Wind Drop

படத்தின் நாயகன் ஸ்டெப்ன்னேகெர்ட் விமானநிலையம், விமானங்கள் வந்து போக தகுதியுடையதாக இருக்கிறதா என ஆய்வு செய்வற்காக வருகை புரிகிறார். விமான நிலையத்திற்குள் தண்ணீரை பிடித்து அனைவருக்கும் விற்பனை செய்யும் சிறுவன், விமானநிலையத்தை ஒவ்வொரு அங்குலத்தையும் உயிர்ப்புடன் புதுப்பித்துக்கொண்டு இருக்கும் மனிதர்கள் என பலரை கண்டடைகிறார். அவர்கள் வாழ்வாதாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க விமான நிலையம் இயங்க வேண்டும். எனவே, சிறு குறைகளை கருத்தில் கொள்ளாமல் நிறைந்திருக்கும் நிறைகளை நிரவி அறிக்கை தயாரிக்க எண்ணுகிறார்.

ஆனால், ஏதாவது சாக்குபோக்கு சொல்லி ‘விமானநிலையம் தகுதியுடையது அல்ல’ என அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகார வர்க்கத்தின் உயர்மட்டம் கட்டளை பிறப்பிக்கிறது. போலியான காரணத்தை கற்பிக்க விரும்பாமல் உண்மையான காரணத்தை கண்டு அறிக்கை சமர்ப்பிக்க திட்டமிடுகிறார். அந்தக் காரணங்கள் இன்றளவும் உயிர் கொண்டு உலவுவதால் ஸ்டெப்னேகெர்ட் விமானநிலையத்தில் விமானங்கள் உலா வரவில்லை.

Director Nora Martirosyan

படத்தின் இயக்குநர் ஒரு பெண் என்பதை இத்திரைப்படத்தின் சிறப்பான காட்சிகளும்,சட்டகங்களும் சாட்சி கூறும். இதுபோன்ற படங்கள் திரைப்பட இயக்குநர்களுக்கு சொல்லும் செய்தி ஒன்றுதான்.

‘திரைக்கதை எழுத மக்களிடம் செல்லுங்கள். மனிதம் நிறைந்திருக்கும் மாண்புமிகு கதைகள் கிடைக்கும்…’

Should the Wind Drop

Running time: 100 MIN. (Original title: “Si le vent tombe”)

Producers: Julie Paratian, Ani Vorskanyan, Annabella Nezri.

Crew:

Director: Nora Martirosyan

Screenplay: Nora Martirosyan, Emmanuelle Pagano, Olivier Torres, Guillaume André. Camera: Simon Roca. Editor: Nora Martirosyan & Yorgos Lamprimos. Music: Pierre-Yves Cruad.

With: Grégoire Colin, Hayk Bakhryan, Arman Navasardyan, David Hakobyan, Vartan Petrossian, Narine Grigoryan.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.