நாடு முழுவதும் நாளை 12-14 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்…!

டெல்லி: நாடு முழுவதும் நாளை 12-14 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. இதுவரை 15வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், நாளை முதல் 12 வயது முதல் 14 வயதுடையவர்களுக்கு கார்பெவாக்ஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிகறது.

இதுதொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ,12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பதிவு நாளை (மார்ச் 16) முதல் https://www.cowin.gov.in/ என்ற கோவின் இணையதளத்தில்  தொடங்குகிறது. அதன்படி,12-14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தடுப்பூசி மற்றும் முதியவர்கள் முன்னெச்சரிக்கை டோஸ்களுக்கு எவ்வாறு பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதியதாக இணையதளத்தில் பதிவு செய்பவர்கள் முதலில்,

  • http://www.cowin.gov.in என்ற இணைப்பைப் பயன்படுத்தி Co-WIN போர்ட்டலைத் திறந்து அங்கே காணப்படும், தடுப்பூசிக்கு பதிவு செய்ய “பதிவு/உள்நுழை” என்ற பட்டனை கிளிக் செய்யவும்
  • நீங்கள் ஏற்கனவே போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினராக இருந்தால், உங்கள் சான்றிதழ்களைப் பயன்படுத்தி உள்நுழையவும் இல்லையெனில் புதிய கணக்கை உருவாக்க பதிவு செய்யவும்.
  • குழந்தைகளுக்காக, ஆதார் அட்டை, பான் கார்டு போன்ற சில ஆவணங்களை பதிவேற்றம் செய்யும்படி கேட்கப்படுவீர்கள். அ வர்களிடம் அது இல்லை என்றால், குழந்தைகள் தங்கள் பள்ளி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பதிவு செய்யலாம்.
  • முதியவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் தகுதியானது கோ-வின் அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட 2 வது டோஸின் தேதியின் அடிப்படையில் இருக்கும்.
  • முதியோருக்கான சரிபார்ப்பு ஆதாரைப் பயன்படுத்தி பதிவு செய்யப்படும்.
  • அதுமட்டுமின்றி, அவர்கள் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, NPR இன் கீழ் RGI வழங்கிய ஸ்மார்ட் கார்டு அல்லது புகைப்படங்களுடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்களையும் பயன்படுத்தலாம்.
  • பின்னர் உங்கள் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். நீங்கள் சரிபார்க்க வேண்டும்.
  • சரிபார்ப்பு முடிந்ததும் நீங்கள் உங்களுக்குரிய முதல் தவணையை பதிவு செய்யலாம்.அதற்கு உங்கள் இருப்பிடம், பின்கோடு போன்றவற்றை உள்ளிட்டு, முன்பதிவு நேரத்தைத் தட்டவும்/கிளிக் செய்யவும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.