பாஸ்பரஸ் குண்டு என்றால் என்ன? அந்த வெடிகுண்டை ரஷ்யா பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது உண்மையா?

Russia Ukraine War: உக்ரைனில் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை ரஷ்யா பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. 

பாஸ்பரஸ் குண்டு என்றால் என்ன? அந்த வெடிகுண்டை ரஷ்யா பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது, அது எவ்வளவு அழிவை ஏற்படுத்தும்?

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் (Russia Ukraine War) ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டுகிறது. ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் நகரங்களை குறிவைத்து வருகிறது. 

இதில், ஏவுகணை தாக்குதல்களுடன், ரஷ்யா பல பயங்கர வெடிகுண்டுகளையும் பயன்படுத்தியதாக ரஷ்யா மீது குற்றம் சாட்டப்படுகிறது. கிழக்கு லுஹான்ஸ்கில் உள்ள போபாஸ்னா நகரில் பாஸ்பரஸ் குண்டை பயன்படுத்தியதாக ரஷ்யா மீது உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. 

(Photo/AFP)

பாஸ்பரஸ் வெடிகுண்டு மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. அதில் யாராவது சிக்கிக் கொண்டால், அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பது கவலையளிக்கக்கூடிய செய்தியாக இருக்கிறது.

பாஸ்பரஸ் குண்டு என்றால் என்ன?
இந்த குண்டு மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. இதில் பாஸ்பரஸ் பயன்படுத்தப்படுகிறது.  நிறமற்று காணப்படும் ரசாயனமாக, சில நேரங்களில் அது வெளிர் மஞ்சள் நிறமாக இருக்கும். 

பாஸ்பரஸ் என்பது பூண்டு போன்ற வாசனையுள்ள மெழுகுப் பொருள். அது, ஆக்ஸிஜனுடன் தொடர்பு கொண்டவுடன் எரியத் தொடங்குகிறது. பாஸ்பரஸ் குண்டுகளை போரில் பயன்படுத்தலாம், ஆனால் குடியிருப்பு பகுதிகளில் பயன்படுத்த தடை உள்ளது.

மேலும் படிக்க | ஒரு நாளைக்கு 40 வீரர்களை சுட்டுத்தள்ளும் மென்பொறியாளர்

பாஸ்பரஸ் குண்டு எவ்வளவு கொடியது?
இந்த வெடிகுண்டு மிகவும் ஆபத்தானது, இந்த வெடிகுண்டு வெடித்த பிறகு, வெப்பநிலை 800 டிகிரியை எட்டும் என்று மதிப்பிடப்படுகிறது இந்த அளவு வெப்பத்தில் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடும். 

பாஸ்பரஸ் குண்டு, வெட்டவெளியில் விழுந்தால், அது நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் சுற்றளவுக்கு பரவும். இந்த குண்டுகள் தீர்ந்து போகும் வரை அல்லது அந்த இடத்தில் ஆக்ஸிஜன் முழுமையாக தீர்ந்து போகாத வரை எரிந்து கொண்டே இருக்கும்.

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

அது ஏன் கொடியது?
இந்த குண்டுகளின் பிடியில் ஒருவர் சிக்கினால், அவர் நொடியில் இறந்துவிடுவார். யாராவது தொலைவில் இருந்தாலும், அது அவரது தோலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தோல் எரிய ஆரம்பித்து சில சமயங்களில் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். 

தோலுடன் தொடர்பு கொண்டவுடன், பாஸ்போரிக் பென்டாக்சைடு போன்ற ரசாயனங்கள் உருவாகத் தொடங்குகின்றன. இந்த இரசாயனம் தோலில் உள்ள வினைபுரிந்து பாஸ்பாரிக் அமிலத்தை உருவாக்குகிறது, 

மிகவும் ஆபத்தான பாஸ்பரஸ் அமிலம், உள் தோலுக்குள் செல்வதன் மூலம், அதன் திசுக்கள் பல உறுப்புகளை சிதைக்கத் தொடங்குகின்றன, இப்படி பாதிக்க்கப்பட்டவர்களுக்கான சிகிச்சையும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும்.  

மேலும் படிக்க | உக்ரைன் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், தயார் நிலையில் தைவான் ராணுவம்

பாஸ்பரஸ் வெடிகுண்டு தொடர்பான சட்டம் என்ன?
பாஸ்பரஸ் வெடிகுண்டு மிகவும் ஆபத்தான பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் 1977 இல் நடைபெற்ற மாநாட்டில் வெள்ளை பாஸ்பரஸின் பயன்பாடு தடைசெய்யப்பட்டது. 

இதன் பிறகு 1997ல் இரசாயன ஆயுதம் பயன்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டது. இதில் குடியிருப்பு பகுதிகளில் இந்த வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டால், வெள்ளை பாஸ்பரஸ் ரசாயன ஆயுதமாக கருதப்படும் என முடிவு செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தில் ரஷ்யாவும் கையெழுத்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

பாஸ்பரஸ் வெடிகுண்டு பலமுறை பயன்படுத்தப்பட்டது
பாஸ்பரஸ் வெடிகுண்டு உலகில் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் பாஸ்பரஸ் குண்டை பயன்படுத்தியது. பிரிட்டிஷ் இராணுவம் ராக்கெட்டுகள், கையெறி குண்டுகள் மற்றும் பாஸ்பரஸ் குண்டுகளை அப்போது ஜப்பானுக்கு எதிராக பயன்படுத்தியது.

நாஜி ராணுவம் தாக்கியபோது, ​​கண்ணாடி பாட்டிலில் பாஸ்பரஸை நிரப்பி இந்தக் குண்டு பயன்படுத்தப்பட்டது. இது மட்டுமின்றி, ஈராக் மற்றும் அமெரிக்கா போரிலும் பாஸ்பரஸ் குண்டு பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் போரிலும் இது பயன்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க | உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி போலந்தில் தஞ்சம் புகுந்தார்; ரஷ்யா பரபரப்பு தகவல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.