சூப்பர் சான்ஸ்.. தங்கம் விலை தொடர் சரிவு.. இது வாங்க சரியான நேரமா?

தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் தொடர்ந்து இன்றும் 4வது நாளாக சரிவில் காணப்படுகின்றது. இந்த சரிவானது மீண்டும் தொடருமா? அல்லது இப்படியே ஏற்றம் காணுமா? அடுத்து என்ன செய்யலாம். நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தங்கத்திற்கு ஆதரவாக தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையானது அதிகரித்து கொண்டே தான் செல்கின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலையினை நீண்டகால நோக்கில் ஊக்குவிக்கலாம். எனினும் மீடியம் டெர்மில் தங்கத்திற்கு எதிராகவே பல காரணிகளும் உள்ளன.

இதற்கிடையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது எவ்வளவு? இந்திய சந்தையில் தங்கம் விலையானது எவ்வளவு? ஆபரண தங்கத்தின் விலை எவ்வளவு? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

பேடிஎம், போன்பே-வுக்கு தலைவலி கொடுக்க வருகிறது டாடா.. இனி ஆட்டம் அதிரடி தான்..!

முக்கிய முடிவு வெளியாகலாம்

முக்கிய முடிவு வெளியாகலாம்

நேற்றும் இன்றும் நடந்து கொண்டிருக்கும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்றைய கூட்டத்தின் முடிவில் வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம். இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திர சந்தை தொடர் ஏற்றம்

பத்திர சந்தை தொடர் ஏற்றம்

அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், அதுவும் டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது. இதனால் தங்கம் விலையில் அழுத்தம் காணப்படுகின்றது. இது தொடரும் பட்சத்தில் இன்னும் தங்கம் விலையானது சரிவினைக் காணலாம்.

5 வருட உச்சத்தில் டாலர்
 

5 வருட உச்சத்தில் டாலர்

ஒரு புறம் அமெரிக்காவில் பணவீக்கம் என்பது 40 வருட உச்சத்தில் காணப்பட்டாலும், அதனை குறைக்க மத்திய வங்கியானது நிச்சயம் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்க பத்திர சந்தையும் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இதற்கிடையில் அமெரிக்க டாலரின் மதிப்பானது 5 வருட உச்சத்தில் காணப்படுகிறது. இது தங்கம் விலையில் மேற்கொண்டு சரிவினை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்ற இறக்கம் இருக்கலாம்

ஏற்ற இறக்கம் இருக்கலாம்

எப்படியிருப்பினும் தற்போது தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்பட்டாலும், ஃபெடரல் வங்கி என்ன அறிவிக்கப்போகிறதோ என்ற யூகத்தின் மத்தியில் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம். இதனால் மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

ரூ.4100-க்கு மேல் சரிவு

ரூ.4100-க்கு மேல் சரிவு

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு முந்தைய வாரத்தில் அதிகபட்சமாக 55,558 ரூபாயாக உச்சம் தொட்டது. இதே இன்று 51,359 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக அதனுடன் ஒப்பிடும்போது 4,100 ரூபாய்க்கு மேலாக சரிவினைக் கண்டு காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைக்கும் வர்த்தகர்களுக்கு இது சரியான வாய்ப்பு தான் என்றாலும், இது இன்னும் குறையும்பட்சத்தில் வாங்கினால் இன்னும் லாபகரமானதாக இருக்கலாம்.

டெக்னிக்கல் பேட்டர்ன் என்ன சொல்கிறது?

டெக்னிக்கல் பேட்டர்ன் என்ன சொல்கிறது?

சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் வார மற்றும் தினசரி கேண்டில், 5 மணி நேர கேண்டில் என அனைத்தும் தங்கம் விலை சரியும் விதமாகவே காணப்படுகின்றது. இந்திய சந்தையிலும் விலை சரியும் விதமாகவே காணப்படுகிறது. இது தவிர பல்வேறு குறிகாட்டிகளும் சரியலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றன. ஆக ஷார்ட் கவரிங் நலல் ஆப்சனாக பார்க்கப்பட்டாலும், அறிவிப்பு வருவதை பொறுத்து இது மாறுபடலாம் என்பதால் கட்டாயம் ஸ்டாப் லாஸ் வைத்து வர்த்தகம் செய்வது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்றும் 4வது நாளாக சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 10.55 டாலர்கள் குறைந்து, 1919.15 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி

தங்கம் விலையினை போலவே வெள்ளி விலையும் சரிவிலேயே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.53% குறைந்து, 25.025 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் வெள்ளி விலையும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 173 ரூபாய் குறைந்து 51,391 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வில் குறைந்த விலையையும் உடைக்கும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலையும் சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 405 ரூபாய் குறைந்து, 67,920 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை என்றாலும், உடைக்கும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று 3வது நாளாக குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 27 ரூபாய் குறைந்து, 4792 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 216 ரூபாய் குறைந்து, 38,336 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 29 ரூபாய் குறைந்து, 5228 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 232 ரூபாய் குறைந்து, 41,824 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 0.50 பைசா குறைந்து, 72.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 723 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, 72,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், டாலர் மதிப்பு, வட்டி விகிதம் அதிகரிப்பு என பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், இன்றும் சற்று சரிவினைக் கண்டுள்ளது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் பொறுத்திருந்து வாங்குவது நல்லது. இதே நீண்டகால நோக்கிலும் சற்று பொறுத்திருந்து வாங்கினால் இன்னும் லாபம் கூடுதலாக கிடைக்கலாம். இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on march 16th 2022: gold prices fall as investors cautions ahead of fed decision

gold price on march 16th 2022: gold prices fall as investors cautions ahead of fed decision/சூப்பர் சான்ஸ்.. தங்கம் விலை தொடர் சரிவு.. இது வாங்க சரியான நேரமா?

Story first published: Wednesday, March 16, 2022, 11:19 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.