விஜய் குரலில் தெறிக்கவிட வரும் ’ஜாலியோ ஜிம்கானா’: ‘பீஸ்ட்’ இரண்டாவது பாடல் அப்டேட்

’பீஸ்ட்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ’பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் ’அரபிக்குத்து’ கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகி 150 மில்லியன் பார்வைகளுக்கு மேல் கடந்து பல்வேறு சாதனைகளை குவித்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது இரண்டாவது பாடல் வரும் மார்ச் 19 ஆம் தேதி வெளியாகிறது என்று புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

புரோமோ வீடியோவைக் காண: https://twitter.com/sunpictures/status/1504087637455343621?s=20&t=ba2VlpSKVL6_1fwA4FTXlw

’பீஸ்ட்’ ஆடியோ லான்ச்சை எதிர்பார்த்தவர்களுக்கு மெகா சர்ப்ரைஸாக விஜய்யே பாடியுள்ள ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலை வெளியிட்டு ரசிகர்களை ஜாலி மூடாக்கியுள்ளது சன் பிக்சர்ஸ். புரோமோ வீடியோவில் செம்ம ஜாலி ப்ளஸ் ரகளையுடன் மஞ்சள் நிற உடையில் விஜய், அனிருத், நெல்சன் உள்ளிட்டோர் ட்ரம்ஸை அடித்துக்கொண்டும் மைக்கில் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலை பாடிக்கொண்டும் தெறிக்கவிடுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.