2 மணி நேர சார்ஜில் 200 கிமீ செல்லும் Oben Rorr எலக்ட்ரிக் பைக்குகள்! இந்திய விலை இதுதான்

புதுடெல்லி: இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால் 200 கிமீ செல்லும் ஓபன் ரோர் எலக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

பெங்களூரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் ஓபன் எலக்ட்ரிக்ஸ் நிறுவனம் புதிய உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது. அங்கு விரைவில் உற்பத்தித் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.  

ஓபன் எலக்ட்ரிக் நிறுவனம் ரோர் என்ற எலக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய இ-பைக்கின் விலை ரூ.99,999 (எக்ஸ்-ஷோரூம் மகாராஷ்டிரா). இந்த பைக்கை ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிமீ வரை பயணிக்க முடியும் என்றும் ஓபன் கூறியுள்ளது.

புதிய பைக் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு முதல் உற்பத்தி வரை இந்தியாவில் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது என்று ஓபன் எலக்ட்ரிக் கூறுகிறது. இந்த புதிய பைக்குக்கான முன் பதிவுகள் இன்று ஆன்லைனில் தொடங்கின. 

மேலும் படிக்க | ஓபன் ரோர் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மோட்டர் சைக்கிள்

வாடிக்கையாளர்கள் Rorr பைக்கை, ₹999 செலுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். வாகனத்தை வாங்குவதற்கு முன், நிதி-ஆயோக்கின் இ-அம்ரிட் போர்ட்டலில் அரசாங்க விலக்குகள், நிதி மற்றும் காப்பீட்டு விருப்பங்களுக்கான தங்களின் தகுதியை அவர்கள் சரிபார்க்கலாம். மூன்று வண்ணங்களில் இந்த பைக் கிடைக்கிறது.  

விலை 
பைக் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விலையில் இருக்கும். மாநில வாரியான மானியத்திற்குப் பிறகு நிறுவனம் அறிவித்த விலைப் பட்டியல் இது.  

டெல்லி: ரூ 94,999

மகாராஷ்டிரா: ரூ 99,999

குஜராத்: ரூ.1,04,999

ராஜஸ்தான்: ரூ.1,14,999

கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா: ரூ.1,24,999

மேலும் படிக்க | மகிந்திராவும் ஹீரோவும் இணைந்து வழங்கும் மிக மலிவான மின்சார ஸ்கூட்டர்

பேட்டரி மற்றும் வரம்பு
பைக், 3 வினாடிகளில் 0-40 என்ற முடுக்கத்தை அடையும். இது மணிக்கு 100 கிமீ வேகத்தை வழங்குகிறது. 2 மணிநேரம் சார்ஜிங் செய்தால், 200 கிலோ மீட்டர் வரி ஓடும் பைக் இது.  

அம்சங்கள்
முன்கணிப்பு பராமரிப்பு, சவாரி விவரங்கள், பேட்டரி நிலை, ஜியோ-ஃபென்சிங், ஜியோ-டேக்கிங், பேட்டரி திருட்டு பாதுகாப்பு, சார்ஜிங் ஸ்டேஷன் லொக்கேட்டர், ஆன்-டிமாண்ட் சேவை மற்றும் சாலையோர உதவி போன்ற இணைக்கப்பட்ட வாகன அம்சங்களை ஓபன் ரோர் கொண்டுள்ளது. 

ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் டிரைவர் அலர்ட் சிஸ்டம் ஆகியவையும் இதில் உண்டு.  வாகனம் இயக்கத்தில் உள்ளதா, பராமரிப்பு தேவைப்படுகிறது என்பது போன்ற தகவல்களை காட்சி மற்றும் செவிவழி குறிப்புகளை வழங்கும் வசதியை கொண்ட பைக் ஓபன் ரோர் எலக்ட்ரிக் பைக்.

மேலும் படிக்க | ஒகினாவா ஆட்டோடெக்கின் 200 கிமீ ரேஞ்ச் கொண்ட மின்சார ஸ்கூட்டர்

உற்பத்தி
பெங்களூரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் ஓபன் எலக்ட்ரிக்ஸ் புதிய உற்பத்தி வசதியைக் கொண்டுள்ளது. நிறுவனம் விரைவில் அதன் செயல்பாடுகள் மற்றும் உற்பத்தியைத் தொடங்கும் என்று கூறுகிறது.

நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்த ஆலை ஆண்டுக்கு 3 லட்சம் யூனிட்களின் ஆரம்ப திறனை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Best E Bikes: இவைதான் நாட்டின் மிகச்சிறந்த மின்சார பைக்குகள்: விலை, பிற விவரங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.