இராமயண தடங்கள் மீதான கருத்தரங்கம் – Presentation on Ramayana Trails

2022 மார்ச் 10 ஆம் திகதி கொழும்பிலுள்ள சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் இலங்கை-இந்திய சங்கம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் ஆகியவற்றால் நடத்தப்பட்டிருந்த இராமாயண தடங்கள் குறித்த கருத்தரங்கு ஒன்றில் பிரதி உயர் ஸ்தானிகர் ஸ்ரீ வினோத் கே ஜேக்கப் அவர்கள் உரை நிகழ்த்தியிருந்தார்.

2.         பிரதி உயர் ஸ்தானிகர் அவர்கள் தனது உரையில், இலங்கை இந்தியா இடையிலான கலாசார உறவுகள் மற்றும் வலுவான மக்கள் தொடர்புகள் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் இந்த அடிப்படையில் 2021 ஏப்ரலில் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான காற்றுக்குமுளி நடைமுறைகள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தமை, அதேபோல சுற்றுலாத்துறை குறித்த மூன்றாவது கூட்டு பணிக்குழுவின் சந்திப்புகளை நடத்தியமை மற்றும் 2021 ஒக்டோபரில் குஷி நகருக்கான விமான சேவையை இலங்கையிலிருந்து ஆரம்பித்திருந்தமை ஆகிய விடயங்கள் தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

3.         சுற்றுலாத்துறை சந்தைக்கான மிகவும் முக்கியமான தளமாக இலங்கையை இந்தியா கருதும் அதேவேளை மீண்டும் சுற்றுலாப்பயணிகளை வரவேற்பதற்கு இந்தியா தயார் நிலையில் உள்ளது. அதேபோல சுற்றுலா துறையை ஊக்குவிப்பதற்காக தடுப்பூசிகளை முழுமையாக பெற்றவர்களுக்கு இந்திய அரசாங்கமானது அண்மையில் RT-PCR பரிசோதனைக்கான தேவையினை இடை நிறுத்தியுள்ளது. அத்துடன் 2022 மார்ச் 27ஆம் திகதி முதல் சர்வதேச வர்த்தக விமானங்களின் சேவைகளை மீள ஆரம்பிக்கும் அறிவித்தலும் இந்தியாவால் விடுக்கப்பட்டுள்ளது.  2021ஆம் ஆண்டில் கொவிட் தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 1.94 இலட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இதில் 56,268 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் மொத்த வருகையின் 29 வீதமான பங்கினை அவர்கள் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும் இந்த இலக்கங்களை அதிகரிப்பதற்கான முயற்சிகளை இலங்கை தரப்பில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

4. கடந்த இரு மாதங்களில் 7682 சுற்றுலா பயணிகள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு பயணித்துள்ளனர், அதேசமயம் 196 பேர் மருத்துவ தேவைகளுக்காக இந்தியாவுக்கு பயணித்துள்ளனர் என்றும் பிரதி உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். 2019இல் இந்தியாவுக்கு 3 லட்சம் சுற்றுலா பயணிகள் சென்றிருந்த சாதனையை எட்டுவதற்கான முயற்சிகளை தொடரவேண்டிய தேவை காணப்படுகின்றது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள வாய்ப்புக்களிலிருந்து நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த தருணத்தை தற்போது இலங்கையிலுள்ள சகல தரப்பினரும் கொண்டிருப்பதுடன் இவ்விவகாரத்தில் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ளுதல், அதேபோல பொலிவூட்டில் இலங்கை கலைஞர்களின் பங்களிப்பு, முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினரின் வகிபாகம் ஆகியவற்றை உதாரணமாக குறிப்பிட முடியும்.

5. இலங்கையில் உள்ள இராமாயண தடங்கள் தொடர்பான ஒரு விளக்கக்காட்சியும் சபையோருக்காக வழங்கப்பட்டிருந்ததுடன் இது இந்திய சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்திற்கு ஏதுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம் 

கொழும்பு 

11 மார்ச் 2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.