ஒரு அடி நிலத்தைக்கூட விட்டுத்தரமாட்டோம்… புடினுடைய 15 அம்ச திட்டத்தை திட்டவட்டமாக நிராகரித்த உக்ரைன் ஜனாதிபதி


போரை நிறுத்தி, உக்ரைனை விட்டு வெளியேறவேண்டுமானால், தங்கள் அமைதித் திட்டத்திற்கு உக்ரைன் சம்மதிக்கவேண்டும் என்று கூறி 15 அம்ச திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது ரஷ்யா.

ஆனால், அந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள திட்டவட்டமாக மறுத்துவிட்டார் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி.

காரணம், உண்மையில் அந்த 15 அம்ச அமைதித் திட்டம், ரஷ்யா விதித்துள்ள 15 நிபந்தனைகள்தான்.

அதில் என்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்றால், ரஷ்யா கிரீமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டதை உக்ரைன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

எந்த Luhansk மற்றும் Donetsk ஆகிய பகுதிகளுக்கு சுதந்திரம் கொடுப்பதாகக் கூறி புடின் போரைத் துவங்கினாரோ, அந்த பகுதிகளுக்கு சுந்தந்திரம் கொடுக்கப்பட்டதை உக்ரைன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது. உக்ரைனில் மேற்கத்திய நாடுகள் இராணுவத் தளம் அமைக்க அனுமதிக்கமாட்டோம் என உறுதியளிக்கவேண்டும்.

இப்படி, வரிசையாக நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளனவேயொழிய, அந்த ‘அமைதித் திட்டத்தில்’ உக்ரைனுக்கு சாதகமான வேறெந்த விடயத்தையும் காணோம்.

ஆகவே, தான் அந்த திட்டத்தை நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி, எங்களைப் பொருத்தவரை, போர் முடியவேண்டும், பாதுகாப்புக்கு உத்தரவாதம் வேண்டும், இறையாண்மை, நாட்டின் ஒற்றுமையை மீட்டல், எங்கள் நாட்டுக்கான உண்மையான உத்தரவாதங்கள், உண்மையான பாதுகாப்பு, இவற்றிற்குத்தான் முன்னுரிமை என்று கூறிவிட்டார்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.