பப்பாளி பழம் அதிகமாக சாப்பிடுவதால் இந்த பக்கவிளைவுகள் உண்டாகும்! ஐாக்கிரதையாக இருங்க


பப்பாளி சாப்பிடுவது எப்போதும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. 

செரிமானம், உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து என்று கூறப்படுகிறது.

ஆனால் இதனை அதிகமாக சாப்பிட கூடாது. பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

அந்தவகையில் தற்போது பப்பாளி பழம் அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

  • கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது. கருப்பை சுருங்கி விரியும் தன்மையை அதிகப்படுத்தும். அதனால் கூடுமானவரை பப்பாளியில் இருந்து கர்ப்பிணிகள் தள்ளி இருப்பது நல்லது. 
  •  பப்பாளியை அதிகமாக உண்ணும் போது நமது உணவுக்குழாய் தடைபட வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் தினமும் அதிகமாக பப்பாளி பழத்தை சாப்பிடுவதை தவிருங்கள். சர்க்கரை அளவு குறைத்து விடுகிறது .
  •  நன்கு முழுமையாகப் பழுக்காத பப்பாளியில் உள்ள பால் போன்ற தன்மை சிலருக்கு அழற்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே முடிந்த வரை பழுக்காத பப்பாளியை சாப்பிடுவதை தவிருங்கள். 
  • பப்பாளி விதைகள் ஆண்களின் ஆண்மை தன்மையைப் பாதிக்கிறது. இதனால் உயிரணுக்களின் எண்ணிக்கையும் குறைத்து விடுகிறது.
  • அதிகமாக பப்பாளி சாப்பிடுவதால் வயிற்று சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் வயிற்று பிடிப்புகள், வயிறு வீக்கம், குமட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். 
  • பப்பாளி பழத்தில் உள்ள பால் போன்ற தன்மை இரத்தத்தை நீர்க்கச் செய்ய வைக்கும் தன்மை கொண்டவை. பிளட் தின்னர் எடுத்துக் கொள்பவர்களும் அறுவை சிகிச்சைக்குத் தயாராகும் நபர்கள் பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்வதை தவிருங்கள்.
  • இதயக் கோளாறு உடையவர்கள் பப்பாளி பழத்தைச் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதிலுள்ள பப்பேன் உங்க இதய துடிப்பை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 
  •  பப்பாளியில் பென்சில் ஐசோதியோசயனேட் என்று நச்சுத் தன்மையை உண்டாக்கும் பொருட்கள் உள்ளன. நம் உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பப்பாளியின் தோல் பகுதியை சீவி விட்டுதான் சாப்பிட வேண்டும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.