பழைய விண்டேஜ் விராட் கோலி! புகழாரம் சூட்டும் ஆகாஷ் சோப்ரா

விராட் கோஹ்லியை புராதன விண்டேஜ் கார் என பாராட்டிய இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் ஆகாஷ் சோப்ரா  

ஞாயிற்றுக்கிழமை மாலை (2022, மார்ச் 27) மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2022 பதிப்பின் 3வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  (ஆர்சிபி) பஞ்சாப் கிங்ஸை (பிபிகேஎஸ்) எதிர்கொண்டது. 

மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி  ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முன், 205 ரன்கள் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் அதிக ஸ்கோர்களை குவித்தது. 

மேலும் படிக்க | இந்த தடவை ஆரஞ்ச் கேப் விராட் கோலிக்குதானாம்- எப்படி தெரியுமா?

ஆனால் 19 ஓவரிலேயே 208 ரன்கள் அடித்து இந்த போட்டியில் வெற்றி பெற்றது மயங்க் தலைமையிலான பஞ்சாப் அணி. 

புதிய கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 57 பந்துகளில் 88 ரன்கள் எடுத்த நிலையில், முன்னாள் கேப்டன் விராட் கோலி 29 பந்துகளில் 41* எடுத்து அருமையான ஸ்கோர்களை பதிவு செய்தனர். 

போட்டி முடிவடைந்த பிறகு வர்ணனையாளராக கிரிக்கெட் கமெண்ட்ரிகளை வழங்கிய முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா, கோஹ்லியின் அருமையான ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்தார். 

“அவர் நன்றாகத் விளையாடினார். இது அந்த பழைய விண்டேஜ் விராட் கோலியைப் போல இருந்தது. அவர் களத்தில் அதிரடியாக விளையாடத் தொடங்கினார், அவர் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாசித் தள்ளினார்” என்று சோப்ரா ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறினார்.

மேலும் படிக்க | IPL 2022 முதல் போட்டியில் ஆர்.சி.பி செய்த தவறு இதுதான்!

“அவர் சீக்கிரம் ஸ்கோர் செய்யவில்லை என்பதல்ல. ஃபாஃப் டு ப்ளெசிஸுக்கு துணையாக இருக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். ‘நான் பல படங்களில் ஹீரோவாக இருந்திருக்கலாம், ஆனால் இப்போது நான் துணைநடிகராக நடிக்க வேண்டும் என்பதை அவர் புரிந்துகொண்டார். ஹீரோவின் அண்ணன் வேடம் தன்னுடையது என்பதை கோலி புரிந்துக் கொண்டார்’ என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.

“அவர் ஃபாஃப் டு ப்ளெசிஸை மைய நிலைக்கு கொண்டு வர அனுமதித்தார், ஆனால் அவர் இறுதிவரை சரியாக இருந்தார்,  பேராசை இல்லாமல், தனது பணியை விராட் செய்தார்” என்று அவர் மேலும் கூறினார். .

ஆர்சிபி அமைப்பில் டீம் இந்தியாவின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கருடன் கோஹ்லி மீண்டும் இணைவதையும் சோப்ரா சுட்டிக் காட்டினார். ஐபிஎல் 2022 க்கு RCB இன் தலைமை பயிற்சியாளராக பங்கர் பணியாற்றுகிறார். இதைச் சுட்டிக் காட்டிய அவர், “இந்த விராட் கோலியைப் பார்க்க நான் மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் கடந்த ஆறு மாதங்களாக, நாங்கள் வித்தியாசமான விராட் கோலியைப் பார்த்தோம். அவர் ஒரே மனநிலையில் இருந்தார் – எல்லாவற்றையும் தற்காத்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் அவர் பின்பற்றிய செயல்முறை காட்டியது, இப்போது அவர் தனது பழைய நிலைக்கு திரும்பிவிட்டார். சஞ்சய் பங்கர் மற்றும் விராட் கோலிக்கு இடையிலான கெமிஸ்ட்ரி, கோஹ்லியிடம் இருந்து சிறந்த விளையாட்டைக் கொண்டுவருகிறது” என்று தெரிவித்தார்.

கோஹ்லி பிபிகேஎஸ்ஸுக்கு எதிரான ஆட்டமிழக்காமல் 141.38 வேகத்தில் விளையாடினார். எதிர்வரும் புதன் கிழமையன்று அதே இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை எதிர்கொள்கிற RCB இன் அடுத்த ஆட்டத்திலும் இதே நிலையைத் தொடர அவர் ஆர்வமாக இருப்பார்.

மேலும் படிக்க | முதல் போட்டியில் தோற்றால் சென்னை சாம்பியன் ஆகாதா?!- உண்மை என்ன?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.