வாகன ஃபிட்னஸ் டெஸ்ட் அப்டேட்: இனி இந்த முக்கிய பணியை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்

புதுடெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மாசுபாட்டை குறைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பல பிரச்சனைகளில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், தானியங்கி சோதனை நிலையத்தின் (ஆடோமேடிக் டெஸ்டிங்க் ஸ்டேஷன்) பணியில் பல மேம்பாடுகள் மற்றும் மாற்றங்களைச் செய்வதுடன் அரசாங்கம் ஒரு முன்மொழிவை செய்துள்ளது. 

இதன்படி, எந்த மாநிலத்தில் இருந்து வாகனம் வாங்கியிருக்கிறீர்களோ அந்த மாநிலத்தின் பதிவும் இயல்பாகவே நடக்கும். அரசு செய்திருக்கும் புதிய மாற்றங்களில், இனி எந்த மாநில வாகனத்தின் ஃபிட்னஸ் டெஸ்டையும் வேறு எங்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். வாகனத்தின் இயங்கும் காலம் முடிந்து விட்டதா, இல்லையா என்ற விவரத்தையும் அந்த மையங்களே சொல்லும். 

தகவல் நேரடியாக சர்வருக்கு செல்லும்

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 25 மார்ச் 2022 அன்று ஒரு அறிவிப்பின் மூலம் இந்த முன்மொழிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறித்து தெரிவித்துள்ளது. சோதனை நிலையங்களை அமைக்கும் திறன் மற்றும் வாகனங்களின் சோதனை முடிவுகள் நேரடியாக சர்வரில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | GST: ஏப்ரல் 1 முதல் மிகப்பெரிய மாற்றம், நிறுவனங்கள் மீது நேரடி தாக்கம் 

மேலும், மின்சார வாகனங்களின் ஃபிட்னஸை சோதிக்க புதிய கருவிகளும் சேர்க்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை தெரிவிக்க மக்களுக்கு அரசாங்கம் 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. இதன் மூலம் மக்கள் இது குறித்த கருத்தையும் தெரிவிக்க முடியும்.

ஏப்ரல் 1ம் தேதி முதல் ஃபிட்னஸ் டெஸ்ட் 

தானியங்கி சோதனை நிலையத்தின் உதவியுடன் பல கட்டங்களாக 1 ஏப்ரல் 2022 முதல் வாகனங்களின் ஃபிட்னஸ் டெஸ்டை இந்திய அரசு கட்டாயமாக்க உள்ளது. கனரக வாகனங்கள் மற்றும் அதிக அளவில் ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ஃபிட்னஸ் டெஸ்டை கட்டாயமாக்க ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு, தானியங்கு சோதனை மையங்களை அமைக்க சிறப்பு நோக்க வாகனங்கள், மாநில அரசுகள், நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் தனிப்பட்ட அமைப்புகளுக்கு அரசு ஒப்புதல் அளித்தது. இன்று நீங்கள் ஒரு காரை வாங்கினால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் ஃபிட்னஸ் டெஸ்டை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏப்ரல் 1 முதல், அரசாங்கம் வாகன ஸ்க்ரேபேஜ் கொள்கையையும் செயல்படுத்தப் போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | இன்றும் நாளையும் வங்கி சேவை பாதிக்கப்படலாம்! முக்கிய தகவல் வெளியீடு 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.