இந்தியா கட்டிய தமிழ் பண்பாட்டுமையம்:யாழ்ப்பாணத்தில் திறப்பு!| Dinamalar

இலங்கை – இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் 1.6 பில்லியன் நிதியுதவில் பல தளங்கள் கொண்டு அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று (28) எளிமையான முறையில் திறந்துவைக்கப்பட்டது.

இதில் யாழ்ப்பாணப் பண்பாட்டு மையத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள்,வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், நல்லூர் பிரதேச சபை தவிசாளர், மதகுருமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

latest tamil news

இந்த நிகழ்வில் கொழும்பில் இருந்து பிரதமர் மஹிந்த, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, கடற்றொழில், கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கை பிரதமர் மஹிந்த மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் நண்பகல் ஒரு மணியளவில் காணொளி முறையில் திறந்து வைக்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.