இந்திய அரசின் சூப்பர் முடிவு.. இனி எரிபொருள், உலோகங்கள், சிமெண்ட் விலை குறையலாம்.. ஏன்?

நாளுக்கு நாள் விலை உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை, சமையல் எண்ணெய் விலை, அடிக்கடி விலையேற்றம் காணும் கேஸ் விலை, இப்படி விலையேற்றம் கண்டும வரும் பொருட்களின் பட்டியல் மிகப்பெரியது. இதற்கெல்லாம் முடிவே கிடையாதா? சாமானிய மக்களை பதம் பார்க்கும் விலை வாசியை குறைக்க அரசு என்ன செய்யப் போகிறது என்ற பல கேள்விகள் எழுந்தன. ஏன் இன்று நாடு முழுவதும் நடந்து கொண்டுள்ள பாரத் பந்தில் இதுவும் ஒரு முக்கிய கோரிக்கையாகவே உள்ளது.

இப்படி பல கேள்விகளுக்கு மத்தியில் மக்களுக்கு இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் சில்லென ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல். அப்படி என்ன அறிவிப்பு? இதனால் என்ன பலன் வாருங்கள் பார்க்கலாம்.

ஒரே வாரத்தில்.. 6 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..?

கட்டுக்குள் உள்ளது?

கட்டுக்குள் உள்ளது?

தொடர்ந்து உயர்ந்து வரும் எரிபொருள் விலை, சமையல் எண்ணெய், உரங்கள் என பலவற்றின் விலை சர்வதேச அளவில் மிகப்பெரியளவில் ஏற்றம் கண்டுள்ளது. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை,. கட்டுக்குள் உள்ளது என மத்திய அமைச்ச பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

வரியை குறைக்கலாம்

வரியை குறைக்கலாம்

இதற்கிடையில் மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் ப்ரீ டிரேட் அக்ரிமென்ட் (free trade agreement)ன் ஒரு பகுதியாக, ஐக்கிய அரசு எமிரேட்ஸில் இருந்து பேரிட்சை, உலோகங்கள், சிமெண்ட், கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவற்றின் மீதான வரியை இந்திய குறைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வர்த்தக ஒப்பந்தம்
 

வர்த்தக ஒப்பந்தம்

வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சரான பியூஸ் கோயலின் ஐக்கிய எமிரேட்ஸ் பயணத்தின்போது,போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, 1157 பொருட்களுக்கு அல்லது 9.7% தவிர மற்ற பொருட்களுக்கு வரியை குறைக்கும். அதே நேரம் UAE 0.7% பொருட்களை வர்த்தகத்தில் இருந்து விலக்கு காட்டியுள்ளதாகவும் ஒப்பந்தத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கட்டணங்கள் குறையலாம்

கட்டணங்கள் குறையலாம்

மே மாதம் முதல் அமலுக்கு வரும் இந்த கூட்டு ஒப்பந்தத்தின் (CEPA) கீழ், இந்தியா, இறக்குமதி செய்யப்படும் மூன்றில் இரண்டு பங்கு இறக்குமதி பொருட்களுக்கு வரியை குறைகக் விரும்புகிறது. மாறாக வர்த்தக பங்குதாரர்கள் 80%-க்கும் அதிகமான பொருட்களின் கட்டணங்களை குறைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பயன்

இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பயன்

இந்த கூட்டு ஒப்பந்தத்தின் மத்தியில் இதன் மூலம் இந்திய சந்தையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, வேளாண்மை, ரத்தினம் மற்றும் ஆபரணங்கள், மீன், காலணிகள், விளையாட்டு சாதனங்கள், பார்மா பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளை சார்ந்த 6000-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரியின்றி இந்திய வர்த்தகர்கள் ஏற்றுமதி செய்யலாம்.

வரி விலக்கு

வரி விலக்கு

இந்தியாவில் இருந்து தற்போது சுமார் 2 லட்சம் கோடி மதிபுள்ள சரக்குகள் UAE-க்கு இறக்குமதி செய்யப்படுகிறது. ஆக மேற்கொண்ட கூட்டு ஒப்பந்தம் அமலுக்கு வரும்போது இவற்றில் 90% பொருட்களுகு வரி இருக்காது. இதன் காரணமாக ஏற்றுமதியாளார்கள் மேலும் வணிகத்தினை மேம்படுத்த முடியும். மேலும் எஞ்சியிருக்கும் 9.5% மேலாக பொருட்களுக்கு அடுத்த 5-10 ஆண்டுகளில் வரி விலக்கு கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதிக்கும் வரி விலக்கு

இறக்குமதிக்கும் வரி விலக்கு

இதேபோல இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலியம் பொருட்கள், பெட்ரோ கெமிக்கல்கள், உலோகங்கள், தாதுக்கள் உள்ளிட்ட பலவற்றிற்கும் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் 7694 பொருட்களுக்கு வரி விலக்கு கிடைக்கும். அடுத்த 5 – 10 ஆண்டுகளில் சுமார் 2400 பொருட்களுக்கு வரி விலக்கு கிடைக்கும்.

வேலை வாய்ப்பு பெருகும்

வேலை வாய்ப்பு பெருகும்

மொத்தத்தில் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் மத்தியில், இது இரு நாட்டின் உற்பத்தியினை மேம்படுத்த வழிவகுக்கும். அதோடு இதனால் வேலை வாய்ப்புகளும் பெருகும். மொத்தத்தில் இதனால் விலை வாசியும் சற்று கட்டுக்குள் வரலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

UAE trade deal: india to reduce import duty on metals, dates, oil and some other products

UAE trade deal: india to reduce import duty on metals, dates, oil and some other products/இந்திய அரசின் சூப்பர் முடிவு.. இனி எரிபொருள், உலோகங்கள், சிமெண்ட் விலை குறையலாம்.. ஏன்?

Story first published: Monday, March 28, 2022, 13:51 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.