சென்னை ஐஐடி ஆய்வு மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; மேற்கு வங்கத்தில் முக்கிய குற்றவாளி கைது

இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் பி.சுகந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை ஐஐடியில் படித்து வந்த ஆய்வு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாகக் கூறப்படும் முக்கிய குற்றவாளியான கிங்ஷுக் தேப்சர்மா (30) தமிழகத்தில் இருந்து சென்ற சிறப்பு போலீஸ் குழுவால் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

கிங்ஷுக் தேப்சர்மா மேற்கு வங்கத்தில் உள்ள டயமண்ட் ஹார்பர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தடுத்து வைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கிங்ஷுக் தேப்சர்மா மீது சக ஆராய்ச்சி மாணவி தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பணியிடத்தில் தனது இரண்டு பேராசிரியர்கள் உட்பட தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.

ஜூன் 2021-ல் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரில் கிங்ஷுக் தேப்சர்மாவும் ஒருவர். பாதிக்கப்பட்ட பி.எச்டி ஆய்வு மாணவி பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பதிவு செய்ய புதிய புகார் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

அனைத்திந்திய ஜனநாயகப் மாதர் சங்கம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கை கையில் எடுத்து, அவருக்கு நீதி கோரி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரிய பிறகு, இந்த வழக்கு வேகமெடுத்தது. இந்த வழக்கை முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ர வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயகப் மாதர் சங்கத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் பி.சுகந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

2020-ம் ஆண்டில், ஆய்வு மாணவியின் புகாரின் அடிப்படையில், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான உள் புகார்கள் குழு (CCASH) அவருடைய சக ஆய்வு மாணவரான கிங்ஷுக் தேப்சர்மா அந்த பெண்ணை வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும் இரண்டு முறை துஷ்பிரயோகம் செய்ததாகக் கண்டறிந்தது – ஒரு முறை ஆய்வகத்திலும் மற்றொரு முறை கூர்க் பயணத்தின் போது, ​​கருவிகளைப் பயன்படுத்துவதைத் தடுத்து ஆய்வகத்தில் இரசாயனங்கள் பயன்படுத்த அவளை கண்டித்தார். பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தபோது தேப்சர்மாவை எச்சரிக்கத் தவறிய ஒரு துணை வழிகாட்டியின் முன்னிலையில் ஆய்வகத்தில் அவர் அந்த பெண்ணுக்கு தொந்தரவை ஏற்படுத்தினார்.

மற்றொரு பேராசிரியர் தேப்சர்மாவுடன் கைகோர்த்துக்கொண்டு அவர் கருவிகளில் அவருக்கான நேரம் கிடைக்காமல் பார்த்துக் கொண்டார் என்று பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான உள் புகார்கள் குழுவால் கூகுள் மீட் விசாரணையின் போது கண்டறியப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.