சென்னை வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி 2-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

Class II student died on School bus accidently hitting in chennai: சென்னை, வளசரவாக்கம் தனியார் பள்ளியில், பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் வெங்கடேஸ்வரா என்ற தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தீக்‌ஷித் என்ற 7 வயது மாணவர் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று தீக்‌ஷித் வழக்கம் போல பள்ளிக்கு வேனில் சென்றுள்ளார். வகுப்பறைக்கு சென்ற தீக்‌ஷித் வேனில் ஒரு பொருளை மறந்து வைத்து விட்டதால், அதை எடுக்க வேனுக்கு திரும்பியுள்ளார். அப்போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்த தீக்‌ஷித் மீது பின்னோக்கி வந்த வேன் மோதி விபத்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவர் திஷித் பள்ளி வளாகத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து வாகன ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்ய ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி வாகனம் மோதியதில் 2ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை அளிக்க மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, தனியார் பள்ளிக்கு நேரில் வந்த மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ், அம்பத்தூர் வருவாய்த் துறை அதிகாரி இளங்கோ, காவல் துணை ஆணையர் மீனா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

இதையும் படியுங்கள்: ரூ100 கோடிக்கு மேல் பற்றாக்குறை; தமிழக அரசிடம் ரூ.88 கோடி கோரும் சென்னை பல்கலைக்கழகம்

வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்த காவல்துறையினர் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, மாணவர்களை வேனிலிருந்து இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஊழியர் ஞானசக்தி கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தநிலையில், பள்ளியில் வாகனம் மோதி உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார். மேலும், பேருந்து மோதி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.