Oscars 2022: ஆக்ஷன், திரில்லர், காமெடி; களேபரமான மேடை; Best மற்றும் Worst தருணங்கள்! |Photo Story

திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கும் Oscars 2022 மேடையே ஒரு படம் போல சுவாரசியமான காட்சிகளால் நிரம்பியது இந்த முறைதான்! ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடந்த பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் தருணங்கள் இதோ.

விருது அறிவிக்க அழைக்கப்பட்ட Shaun White, Tony Hawk and Kelly Slater மூவரும் ஸ்கேட்டிங், சர்பிங் விளையாட்டு வீரர்கள். ஆஸ்கரில் விளையாட்டு வீரர்களுக்கு என்ன வேலை? எனக் கேட்டால் ‘இவர்களுக்கு படங்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும்’ என்கிறார் நிகழ்ச்சி தொகுப்பாளர்.

‘CODA’ பட இயக்குனர் Jane Campion-க்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குக்கும் பழைய கணக்கு ஒன்று உண்டு. 1994 இயக்கத்துக்கான ஆஸ்கர் ஸ்பீல்பெர்க் பெற அப்போது நாமினேசனில் இருந்தார் ஜேன். இந்த வருடம் ஸ்பீல்பெர்க் நாமினேஷனில் இருக்க, ஜேன் விருதைத் தட்டிச் சென்றிருக்கிறார்.

Coda திரைப்படத்தின் சிறந்த தழுவல் திரைக்கதை விருதைப் பெற்ற Sian Heder உரை தாய்மார்களை நெகிழச் செய்திருக்கிறது, “ஒரே நேரத்தில் இயக்குநராகவும் தாயாகவும் இருப்பது கடினம்” என அவர் பேசினார்.

சிறந்த வெளிநாட்டு படமாக ‘Drive My Car’ தேர்வானது. ஹாருகி முரகாமியின் கதையை தழுவி இயக்கியிருந்தார் Ryusuke Hamaguchi.

உக்ரைனுக்கு ஆதரவாக மௌனம் கடைபிடிக்கப்பட்டது நெகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று.

நெகிழ்ச்சி உருக்கம் இப்போ ஆரம்பிக்கிறது சண்டை. வில் ஸ்மித் மனைவியை GI Jane கதாபாத்திரத்தோடு ஒப்பிட போய் வாங்கி கட்டிக்கொள்கிறார் காமெடியன் கிறிஸ் ராக். ஒட்டுமொத்த நிகழ்வும் ஒற்றை புள்ளியில் வேறு ஒன்றாக மாறுகிறது.

முதலில் இது ஸ்கிரிப்டட் என ரசிகர்கள் நினைக்க ஒளிபரப்பும் சேனல்கள் அங்கு நடப்பதை மியூட் செய்யவும் இது எதிர்பாராது நடந்ததாக தெரிய வந்தது.

வில் ஸ்மித், அகாடமியிடம் மற்றவர்களிடம் தன்னுடைய நெகிழ்ச்சியான உரையில் மன்னிப்பு கேட்டாலும் கிறிஸ்-இடம் எதுவும் கேட்கவில்லை.

பாடகரான Diddy, “நாமெல்லாம் குடும்பம், இதனை அன்பால் சரி செய்வோம்.” என்றெல்லாம் சமாதானம் செய்ய முயற்சித்தார்.

‘No TIme To Die’ படத்திற்காக 20 வயதான பாடகி பில்லி எலீஷ் மற்றும் அவரது சகோதரர் பின்னீஷ் சிறந்த பாடலுக்கான விருதை பெற்றனர். பின்னீஷ் பேசும் போது, “இந்த விருதுக்காக நன்றி, இதனை இழக்காமல் இருக்க நாங்க முயற்சி செய்வோம்” என்று பேசினார். கியூட் பிரதர் அன்ட் சிஸ்டர்!

விபரீதம் ஆன காமெடி நிகழ்ச்சி, நெகிழ்ச்சியான கதைகள் என திரைப்படங்களைக் கொண்டாடும் ஆஸ்கார் விழாவை மக்கள் கொண்டாடினர். உங்களுடைய பேவரைட் மொமண்ட் பற்றி கமென்டில் சொல்லுங்க!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.