கோடை காலத்தில் மிகக்குறைந்த விலையில் குளுகுளு ஏசி: அசத்தும் பிளிப்கார்ட் சேல்

கோடை காலம் துவங்கிவிட்டது. இனி காலை, மாலை, மதியம் இரவு என அனைத்து நேரங்களிலும் வெப்பம் அதிகமாகத்தொடங்கும். 

மக்கள் கோடை காலத்தில், நாம் நம் வீட்டை குளிரூட்ட நாம் கூலர், ஏசி என பல வித உபகரணங்களை நாடுகிறோம். ஆனால், வெப்பம் அதிகமாகும் போது, கூலர் தரும் குளிரூட்டல் போதுமான அளவு இருப்பதில்லை. இந்த நேரங்களில் ஏர் கண்டிஷனர்கள் அதாவது ஏசி-தான் நமக்கு கை கொடுக்கின்றது. 

எனினும், இவற்றின் விலை அதிகமாக இருப்பதால், பலரால் இவற்றை வாங்க முடிவதில்லை. எனினும், சாதாரண மக்களும் வாங்கும் வகையில், மலிவான விலையில் ஏசி வாங்கும் பல வழிகளும் உள்ளன. 

இன்றைய நாட்களில் ஏசி வாங்குவது இன்று மிகவும் சுலபமாகிவிட்டது. EMI வசதி மூலம் மிகவும் விலையுயர்ந்த ஏசியை எளிதாக வாங்கி விடலாம். ஒவ்வொரு மாதமும் வெறும் ரூ.1400 வரை செலுத்தி ஏசியை சொந்தமாக்கிக்கொள்ளலாம். 

ஏசி-கள் செயல்பட அதிக மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. ஆனால் நீங்கள் 5 நட்சத்திர மதிப்பீடு கொண்ட ஏசிகளை வாங்கினால், மின்சார கட்டணம் அதிகமாக இருக்காது. மலிவான விலையில் நாம் வாங்கக்கூடிய விண்டோ ஏசி-களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேலும் படிக்க | iPhone 13 மற்றும் SE 3 ஐபோன்களின் உற்பத்தியை Apple குறைப்பதன் பின்னணி

ப்ளூ ஸ்டார் 1.5 டன் 5 ஸ்டார் விண்டோ ஏசி
ப்ளூ ஸ்டார் 1.5 டன் 5 ஸ்டார் விண்டோ ஏசி மிகவும் பிரபலமானது. இந்த ஏசியில் டர்போ கூலிங் உள்ளது. இது அறையை வேகமாக குளிர்விக்க உதவுகிறது. மேலும் இதன் டஸ்ட் ஃபில்டர் திறமையாக தூசியை நீக்குகிறது. இதன் தொடக்க விலை ரூ.40,500 ஆகும். ஆனால் பிளிப்கார்ட்டில் இதை ரூ.34,999க்கு வாங்கலாம். ரூ. 1,197 EMI மூலம் ஏசி-ஐ நாம் வாங்கிச்செல்லலாம். 36 மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் ரூ.1,197 செலுத்த வேண்டும்.

வோல்டாஸ் 1.5 டன் 5 ஸ்டார் விண்டோ இன்வெர்ட்டர் ஏசி
வோல்டாஸ் 1.5 டன் 5 ஸ்டார் விண்டோ இன்வெர்ட்டர் ஏசிக்கு அதிக தேவை உள்ளது. அதன் அளவு மிகவும் சிறியது. எனினும், சிறந்த குளிரூட்டலை அது அளிக்கின்றது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இது சுய-கண்டறிதல் (self-diagnosis) அம்சத்துடன் வருகிறது. 

இதன் BLDC கம்ப்ரசர் சிறந்த செயல்திறனைக் கொடுக்கும் ஆற்றல் கொண்டது. இதன் தொடக்க விலை ரூ.40,990 ஆகும். எனினும், பிளிப்கார்ட்டில் ரூ.34,999க்கு கிடைக்கிறது. 1,197 செலுத்தி வீட்டிற்கு கொண்டு வரலாம். 36 மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் ரூ.1,197 செலுத்த வேண்டும்.

எல்ஜி கன்வெர்டிபிள் 4-இன்-1 கூலிங் 1 டன் 5 ஸ்டார் விண்டோ ஏசி
எல்ஜி கன்வெர்டிபிள் 4-இன்-1 கூலிங் 1 டன் 5 ஸ்டார் விண்டோ ஏசி டூயல் ஃபில்டருடன் வருகிறது. இதன் டிசைனும் மற்ற ஏசியை விட வித்தியாசமானது. இதன் தொடக்க விலை ரூ.56,990, ஆனால் பிளிப்கார்ட்டில் ரூ.31,990க்கு கிடைக்கிறது. 3,555 செலுத்தி EMI மூலம் வீட்டிற்கு கொண்டு வரலாம். 9 மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் ரூ.1,197 செலுத்த வேண்டும்.

ஹிட்டாச்சி 1 டன் 3 ஸ்டார் ஜன்னல் ஏசி
ஹிட்டாச்சியின் 1 டன் 3 ஸ்டார் விண்டோ ஏசி மிகவும் பிரபலமானது. இது பிளிப்கார்டில் 4.2 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதன் தொடக்க விலை ரூ.25,190 ஆகும். ஆனால் பிளிப்கார்ட்டில் இது ரூ.23,990க்கு கிடைக்கிறது. உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், EMI மூலம் ரூ.2000 செலுத்தி இந்த ஏசி-ஐ வாங்கலாம். இஎம்ஐ-யில் 12 மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் ரூ.2,000 செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | Flipkart Sale: சாம்சங்கின் 5ஜி ஸ்மார்ட்ஃபோனை 3 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.