அந்த இடத்துல கூடவா கம்மல் போடுவாங்க..?: வைரலாகும் யாஷிகாவின் வீடியோ..!

துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களில் நடித்த
யாஷிகா ஆனந்த்
, தனது கிளாமரான நடிப்பால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர். அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மோசமான கார் விபத்து ஒன்றில் சிக்கினார். தற்போது உடல்நலம் தேறியுள்ள யாஷிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு ஜூலை 25ம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து காரில் சென்னை நோக்கி வந்துள்ளார். அப்போது அதிவேகாமாக வந்த யாஷிகாவின் கார் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவணி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

‘ஏகே 61’ படத்துல இதெல்லாம் கம்மி… வெளியான மாஸ் தகவல்: குஷியில் ரசிகர்கள்..!

இந்நிலையில் உடல்நிலை சரியாகி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வீடு திரும்பினார் யாஷிகா. தற்போது முழுவதுமாக உடல்நிலை தேறியுள்ள யாஷிகா சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

View this post on Instagram A post shared by Y A S H ������⭐️ (@yashikaaannand)

அதாவது வழக்கமாக காதின் அடிப்பகுதியில் தான் அனைவரும் காது குத்தி கம்மல் போடுவார்கள். ஆனால், யாஷிகா ஆனந்த் சற்றே வித்தியாசமாக காதின் நடுப்பகுதியில் கன் ஷாட் மூலம் பியர்சிங் போட்டுள்ள வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த பதிவிற்கு ‘வலி எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுகிற மாதிரி’ என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பக்கத்தில் இருந்தவரை கூட மறந்து விட்டேன்; ஆர் ஆர் ஆர் குறித்து பெண் ரசிகர்!

அடுத்த செய்திதிடீரென நெல்சனுக்கு நன்றி தெரிவிக்கும் ரசிகர்கள்..காரணம் இதுதான்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.