அமெரிக்க பெட்எக்ஸ் நிறுவன சிஇஓ மாற்றம்; இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு வாய்ப்பு| Dinamalar

வாஷிங்டன்: உலகம் முழுவதும் பார்சல் சர்வீஸ் நடத்தி வரும் பிரபல பெட்எக்ஸ் (பெடரல் எக்ஸ்பிரஸ் கார்ப்ரேஷன்) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான ராஜ் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் முக்கிய நாடு மற்றும் நகரங்களுக்கு பார்சல் சர்வீஸ் சேவை, இ-வர்த்தகம் நடத்தி வரும் பெட்எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. உலகம் முழுதும் பல விமானங்கள், ஆயிரத்து 900 அலுவலகங்கள் , 6 லட்சம் ஊழியர்களை கொண்டது இந்நிறுவனம். இதன் நிறுவனர் பெரட்ரிக் ஸ்மித் ஆவார். இவரே சிஇஓ.,வாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் சிஇஓ பதவியில் இருந்து வரும் ஜூன் 1ல் பதவி விலக உள்ளார். இந்த பதவியில் ராஜ் சுப்பிரமணியன் நியமிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

latest tamil news

இவர் கடந்த 1991ல் ஆசிய மற்றும் அமெரிக்க மார்கெட்டிங் மேனேஜராக பணியை துவக்கினார். தொடர்ந்து தலைமை மார்கெட்டிங் மேனேஜர், தலைவராகவும் ஆனார். தற்போது அவருக்கு தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுமைகளை படைப்பார்

பொறுப்பேற்கவிருக்கும் சுப்பிரமணியன் குறித்து ஸ்மித் கூறுகையில், ‛மக்களுக்காக 50 ஆண்டுகளாக சேவை புரிந்து வரும் நிறுவனத்தில் செயல் தலைவராக பொறுப்பேற்கும் ராஜ் சுப்பிரமணியன் இந்த நிறுவனத்தை வழிநடத்த தகுதிவாய்ந்தவர். அவர் உலகளாவிய பொது பிரச்னைகள் மற்றும் நிறுவன நம்பகத்தன்மையில் கவனம் செலுத்துவார். மேலும் புதுமைகளை படைப்பார்’ என பாராட்டியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.